பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 பெரிய புராண விளக்கம்-5

உவகையை எய்தி-அடைந்து. இரவும்-இரவு நேரத்திலும். நண்பகலும்-உச்சி வேளையிலும். தூய-பரிசுத்தமாக உள்ள. தீம்-இனிய சுவையைப் பெற்ற. பால்-பாலை. மடி-தங்க. ளுடைய மடிகளிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். பெருகிபெருகி வருமாறு. ச்: சந்தி. சொரிய-பொழியும் வண்ணம். முலைகள்-அந்தப் பசுமாடுகளினுடைய முலைகள். சுரந்தனபொழிந்தன. ஆல்: ஈற்றசை நிலை.

பிறகு உள்ள 29-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தச் சேய்ஞலூரில் வாழும் வேதியர்கள் புனையும் தொழிலாகிய யாகமென்னும் சடங்கைச் செய்யும் பொருட்டு ஹோமத்திற்குப் பால் முதலியவற்றை வழங்கும் பசுமாடுகள் தோற்றும் தோற்றப் பொலிவில் முன்பு இருந்ததைக் காட். டிலும், பல மடங்குகள் பாலைத் தங்களுடைய மடிகளி லிருந்து பாலைக் கறக்குமாறு செய்பவையாகி விளங்கி தங்களைப் பாதுகாக்கும் தகுதியைப் பெற்ற அன்போடு இந்தப் பிரமசாரியாகிய விசாரசருமர் அந்தப் பசு மாடு களைப் புல்வெளிக்கு அழைத்துச் சென்று அவற்றை அங்கே. முளைத்திருக்கும் புற்களை மேயச் செய்ததற்குப் பிறகு, மாட்சியைப் பெறும் திறங்களை உடையவை ஆகிவிட்டன என்று அந்தச் சேய்ஞலூரில் வாழ்பவர்களும் அந்தப் பசுமாடுகளை உடையவர்களும் ஆகிய வேதியர்கள் எல் லோரும் தங்களுடைய உள்ளங்களில் மகிழ்ச்சியை அடைந். தார்கள். பாடல் வருமாறு:

“ ‘பூணும் தொழில்வேள் விச்சடங்கு

புரிய ஒம தேனுக்கள் காணும் பொலிவின் முன்னையிலும் அநேக மடங்கு கறப்பனவாய்ப் பேணும் தகுதி அன்பால்இப்

பிரம சாரி மேய்த்ததற்பின் மானும் திறத்த வான' என

மறையோர் எல்லாம் மனம்மகிழ்ந்தார்.”