பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 501

هے۔

பெற்று . த்:சந்தி. தாயாம்-தாய்மார்களைப் போல அ ைமயும். தாய்: ஒருமை பன்மை மயக்கம். தன்மைபா ன்மையைப் பெற்ற. நிலைமையவாய்-நிலைமையை

உடையவை ஆகி. க்:சந்தி, கனைத்து-கனைத்துக் கொண்டு. சி: சந்தி. சுரந்து-சுரப்பிவிட்டு. முலை-தங்களுடைய மடிகளில் இருக்கும் முலைகளில் உள்ள ஒருமை பன்மை மயக்கம், க்:சந்தி, கண்கள்-கண்களின் வழியாக, கறவாமே-யாரும் கறக் காமலேயே. பால்-பாலை. பொழிந்தன.-மழையைப் போலச் சொரிந்தன. ஆல்: ஈற்றசை நிலை. - -

நாயனாருக்குக் கன்றுக் குட்டி உவமை: 'அவ்வரசன் மன்னுரிமைத் தனிக்கன்றும்.’’, 'கன்று போற் கதறி.’’, தெருட்கலை ஞானக் கன்றும். ’, தெய்வ ஞானக் கன் றினை.', 'சிறிய மறைக் கன்றளித்த திருப்பதிக இசை.”, 'கண்ட கவுணியங்கன்றும்.’’, கன்றணை ஆவின் கருத்து வாய்ப்ப.’’, மழ விடையிளங் கன்று ஒன்று.”, 'கன்று தடையுண்டெதிரழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப் போல்..', கன்று கோவினைக் கண்டணைந்ததுவென." என்று சேக்கிழார் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து உள்ள 81-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த விசார சருமர் தம்மை வந்து அடைந்த பசு மாடு 'கள் தங்களுடைய மடிகளில் உள்ள முலைகளிலிருந்து பாலைத் தாங்களே யாரும் கறக்காமல் சொரிய, அதைப் பார்த்துத் தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து நேர்மையாகிய வழியிலேயே செல்லும் தம்முடைய திருவுள்ளத்தில் அந்தப் பால் சிவபெருமானுக்கு அபிடேகப் பொருளாகும் கருத்தைத் தெரிந்து கொண்டு அடியேங்களை ஆட்களாகப் பெற்ற வள்ளலாராகிய சிவபெருமானாரை அடைவதற்கு எண்ணித் தெளிவை அடைந்து அந்தத் தெளி வினால் உண்மையாக உ ள் ள சிவபெருமானாருடைய பூசையை விழையும் விருப்பம் தம்மிடம் வேகமாக எழுந்த அடன்." பாடல் வருமாறு:

பெ-32