பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 505

பிறகு உள்ள 33-ஆம் சுவியின் உள்ளுறை வருமாறு: ஆத்தி மரத்தில் மலர்ந்திருக்கும் மலர்களையும் செழுமையாகிய தளிர்களையும் முதலாக சமீபத்தில் மரங்கள் வளர்ந்து நிற்கும் முல்லை நிலமாகிய காட்டில் வளர்ந் திருக்கும் மரங்களில் மலர்ந்திருக்கும் மலர்களையும் அந்த விசாரசருமர் ஆராய்ந்து கொய்துகொண்டு வந்து பரிசுத்த ராகிய நடராஜப் பெருமான ருடைய அழகிய தலையின் மேல் அணிவதற்கு உரியதாக விளங்கும் திருப்பள்ளித் தாமத் துக்கு உரிய பல மலர்களையும் அந்த விசாரசருமர் பறித்துக் கொண்டு வந்து தைத் திருக்கும் இலைகளால் அமைத்துள்ள மலர்க் கூடையில் வைத்துக்கொண்டு அவற்றை அவர் கொண்டு வந்து நறுமணம் தங்கும் வண்ணம் இட்டருளி னார். பாடல் வருமாறு:

  • ஆத்தி மலரும் செழும் தளிரும்

முதலா அருகு வளர்புறவில் பூத்த மலர்கள் தாம்தெரிந்து

புனிதர் சடிலத் திருமுடிமேல் சாத்த லாகும் திருப்பள்ளித்

தாமம் பலவும் தாம்கொய்து கோத்த இலைப்பூங் கூடையினிற் - கொணர்ந்து மணம்தங் கிடவைத்தார்.' ஆத்தி-ஆத்தி மரத்தில் மலர்ந்திருக்கும். மலரும்-மலர் களும்; ஒருமை பன்மை மயக்கம். செழும்-செழுமையாக இருக்கும். தளிரும்-தளிர்களும்; ஒரும்ை பன்மை மயக்கம். தளிர்-முற்றாத இலை. முதலா-முதலாக உள்ளவற்றை, அருகு-சமீபத்தில். வளர்-பல வகையான மரங்கள் வளர்ந்து நிற்கும். புறவில்-முல்லை நிலமாகிய காட்டில். அந்த மரங்க ளாவன: தேக்கு மரம், வாகை மரம், வேங்கை மரம், நுணா மரம், மகிழ மரம், வேப்ப மரம், மா மரம், தென்ன மரம், பலா மரம், புளிய மரம், நெட்டிலிங்க மரம், அசோக மரம், பன மரம், பலவகையான வாழை மரங்கள், பலாச மரம், தமால மரம், முருங்கை மரம், கலியாண முருக்க மரம் முதலி