பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 509

களும். கனைத்து-கனைத்துக் கொண்டு. முலை-தங்களு டைய முலைகளை; ஒருமை பன்மை மயக்கம். தீண்டதொட்ட அளவிலேயே. ச்:சந்தி. செழும்-செழுமையாகிய இனிய சுவையைப் பெற்ற, பால்-பாலை. பொழிந்தன." சொரிந்தன. ஆல்: ஈற்றசை நிலை, - அடுத்து வரும் 35-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தப் பசுமாடுகள் பொழிந்த பாலை விசார சருமர் எடுத்துக் கொண்டு வந்து தாம் கொண்டு வந்திருந்த குடங் களில் நிரம்புமாறு ஊற்றி அந்தக் குடங்களை அவர் கொண்டு வந்து தாம் விழையும் எண்ணத்தின்படி எல்லாத் தேவர்களுக்கும் தலைவனாகிய சிவபெருமானுக்குத் தாம் வெண்மையான மணல்களால் கட்டியிருந்த திருக்கோயிலுக் குள் அந்தக் குடங்களைச் சிவலிங்கத்துக்கு முன்னால்வைத்து விட்டு வண்டுகள் வந்து மொய்க்கும் திருப்பள்ளித் தாமத் துக்கு உரிய மலர்களைச் செடிகளிலிருந்தும் கொடிகளிலிருந் தும் மரங்களிலிருந்தும் பறித்து அவற்றைத் தம்முடைய கைகளில் எடுத்துக் கொண்டு வந்து வரன்முறைப் படியே முன்பு இருந்த பக்தியோடு தாம் தாபித்திருந்த சிவலிங்கப் பெருமானுக்கு அருச்சனையைப் புரிந்தருளித் தாம். குடங் களிற் கொண்டு வந்திருந்த பாலினால் அபிடேகம் செய் தருளி, பாடல் வருமாறு: * * ' கொண்டு மடுத்த குடம்நிறையக்

கொண்ர்ந்து விரும்பும் கொள்கையினால் அண்டர் பெருமான் வெண்மணல்ஆ

லயத்துள் அவைமுன் தாபித்து வண்டு மருவும் திருப்பள்ளித்

தாமம் கொண்டு வரன்முறையே பண்டைப் பரிவால் அருச்சித்துப்

பாலின் திருமஞ் சனம்.ஆட் டி.' இந்தப் பாடல் குளகம். கொண்டு-அந்தப் பசு மாடுகள் பொழிந்த பாலை விசார சருமர் எடுத்துக் கொண்டு வந்து,