பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 517

வருமாறு:

  • அச்சொற் கேட்ட அருமறையோர்

ஆயன் அறியான் என்றவற்றின் இச்சை வழியே யான் மேய்ப்பேன்

என்றெம் பசுக்கள் தமைக்கறந்து பொச்சம் ஒழுகும் மாணவகன்

பொல்லாங் குரைக்க அவன்தாதை எச்ச தத்தன் தனையழைமின்’

என்றார் அவையில் இருந்தார்கள்." அச்சொல் அயலானாகிய அந்த மனிதன் கூறிய அந்த வார்த்தைகளை. சொல்: ஒருமை பன்மை மயக்கம். கேட்டகேள்விப்பட்ட. அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. மறையோர்-இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறை வேற்றியவர்களும், அந்தச் சேய்ஞலூரில் வாழ்ந்து வருகிற வர்களும் ஆகிய, மறையோர்-வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம், ஆயன்- அந்தப் பசுமாடுகளை மேய்த்துவரும் இடையன். அறியான்-அவற்றை மேய்க்கத் தெரியாதவன், என்று-என்று கூறிவிட்டு. அவற்றின்-அந்தப் பசுமாடுகளி னுடைய. இச்சைவழியே-விருப்பத்தின் படியே. யான்-நான். மேய்ப்டேன்-நான் அந்தப்பசுமாடுகளைப்புல்வெளியில் அழைத் துக் கொண்டு சென்று மேயுமாறு விடுவேன். என்று-என்று கூறி விட்டு. எம்-எங்களுடைய. பசுக்கள்தமைக் கறந்து-பசு மாடுகளினுடைய மடிகளில் இருக்கும் முலைகளிலிருந்து பாலைக் கறந்து; ஆகுபெயர். தமை:இடைக்குறை. தம்: அசை நிலை, பொச்சம்-பொய்யாக. ஒழுகும்-நடந்து வரும். மாண வகன்-பிரமசாரியாகிய இந்த விசார சருமனுடைய, பொல் லாங்கு-பொல்லாத செயலைப்பற்றி. உரைக்க-எடுத்துக் கூறு வதற்கு. அவன்-அந்த விசாரசருமனுடைய. தாதை-தந்தை யாகிய. எச்சதத்தன்தனை-எச்சதத்தனை. தனை: இடைக்

டெ - 33