பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 பெரிய புராண விளக்கம்-5

நிறையும் பெருமை அந்தணர்காள்,

பொறுக்க வேண்டும் நீங்கள் எனக் குறைகொண் டிறைஞ்சி, இனிப்புகுதிற்

குற்றம் எனதே யாம்' என்றான்.'"

மறையோர்-அந்தச் சேய்ஞலூரில் உள்ள நியாயசபையில் அமர்ந்து கொண்டிருக்கும் வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மொழிய-இவ்வாறு கூற. க்:சந்தி. கேட்டு-அதைக் கேட்டு. அஞ்சி-எச்சதத்தன் அச்சத்தை அடைந்து. ச்:சந்தி. சிறு-சிறிய. மா ன வ க ன் - பிரமசாரியும் அடியேனுடைய புதல்வனும் ஆகிய விசார சருமன். செய்த-புரிந்த இது. இந்த அடாத காரியத்தை. இறையும்.சிறிதளவேனும். நான்-அடியேன். முன்பு-இதற்கு முன்னால். அறிந்திலேன்" தெரிந்து கொள்ளவில்லை. இதற்கு-இப்படி அவன் செய்த இந்தக் காரியத்திற்கு. முன்பு-முன்னால். புகுந்த தனை-நடந்த செயலை.நிறையும்-நிறைந்து விளங்கும்.பெரு மை-பெருந்தகைமையைப் பெற்ற, அந்தணர்காள்-வேதியர் களே. பொறுக்க வேண்டும் நீங்கள்.இந்த அடாத செயலைத் தாங்கள் எல்லோரும் பொறுத்தருள வேண்டும். என- என்று அந்த எச்சதத்தன் கூறிவிட்டு. க்:சந்தி. குறை-அந்த மானக் குறைவாக உள்ள செயலை. கொண்டு-நினைத்துக்கொண்டு. இறைஞ்சி-அந்த வேதியர்களை வணங்கிவிட்டு. இனி-இனி மேல். ப்:சந்தி, புகுதின்-இத்தகைய அடாத செயல் நடந் தால்.குற்றம்-அதனால் உண்டாகும் குற்றம். எனதே-அடி யேனுடையதே. இடைக்குறை. ஆம் ஆகும். என்றான்என்று அந்த எச்சதத்தன் கூறினான்.

பிறகு உள்ள 44-ஆம் கவியின் கருத்து வருமாறு:

"அந்தச் சேய்ஞலூரில் உள்ள நியாய சபையில் அமர்ந்து கொண்டிருக்கும் வேதியர்களிடம் அந்த எச்சதத்தன் விடை யைப் பெற்றுக்கொண்டு மாலையில் சந்தியா வந்தனத்தைப் புரிந்துவிட்டு நடராஜப் பெருமானாரை வணங்கிப் பிறகு தன்னுடைய திருமாளிகைக்குள் நுழைந்து, 'நமக்கு உண்