பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 523

y

டான பழி ஒன்று' என்று எண்ணிக்கொண்டே தன்னுடைய புதல்வராகிய விசாரசருமருக்கு உண்மையைக் கூறாத வனாகி, 'இந்த அடாத செயலை என்னுடைய புதல்வ னாகிய விசார சருமன் செய்யும் நிலையைத் தெரிந்து கொள்ளுவேன்' என எண்ணி அன்று இரவு நேரம் கடந்து காலை வேளையில் பசுமாடுகளினுடைய வரிசையைப் புல் வெளியில் முளைத்திருக்கும் புற்களை மேயுமாறு புரியும் பொருட்டுத் தன்னுடைய புதல்வராகிய விசாரசருமர் சென்ற பிறகு மறைந்துகொண்டு அந்த முதிய வேதியனாகிய எச்சதத்தன் போனான். பாடல் வருமாறு:

  • அந்தணாளர் தமைவிடை கொண் டங்தி தொழுது மனைபுகுந்து 'வந்த பழியொன் றெனநினைந்தே

மகனார் தமக்கு வாய்நேரான் 'இந்த நிலைமை அறிவேன்' என்

றிரவு கழிந்து கிரைமேய்க்க மைந்த னார்தாம் போயினபின்

மறைந்து சென்றான் மறைமுதியோன்.' அந்தணாளர்தமை-அந்தச் சேய்ஞலூரில் உள்ள நியாய சபையில் அமர்ந்து கொண்டிருக்கும் வேதியர்களிடம்; உருபு மயக்கம். தம்: அசை நிலை. விடைகொண்டு-விடையை எச்சதத்தன் பெற்றுக்கொண்டு. அந்தி-மாலை நேரத்தில். தொழுது-சந்தியா வந்தனத்தைச் செய்துவிட்டு நடராஜப் பெருமானாரை வணங்கிப் பிறகு. மனை தன்னுடைய திரு மாளிகைக்குள். புகுந்து-நுழைந்து வந்த-நமக்கு உண்டான. .பழிஒன்று-ஒரு பழி. என-என்று இடைக்குறை, நினைந்தேஎண்ணியபடியே. மகனார் தமக்கு-தன்னுடைய புதல்வ ராகிய விசார சருமருக்கு. தம்: அசைநிலை. வாய்-உண் மையை, நேரான்-கூறாதவனாகி; முற்றெச்சம். இந்த நிலைமை-இந்த அடாத செயலை என்னுடைய புதல்வ னாகிய விசாரசருமன் செய்யும் நிலையை. அறிவேன்