பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 பெரிய புராண விளக்கம்- 8

தெரிந்து கொள்ளுவேன். என்று-என எண்ணி, இரவுஅன்று இரவு நேரம். கழிந்து-கடந்து காலை வேளையில். நிரை-பசுமாடுகளினுடைய வரிசையை மேய்க்க-புல்வெளி யில் முளைத்திருக்கும் புற்களை மே யு மாறு புரியும் பொருட்டு. மைந்தனார் தாம்-தன்னுடைய புதல்வராகிய விசாரசருமர். போயின. அந்தப் புல்வெளிக்குச் சென்ற, பின். பிறகு. மறைந்து-தன்னுடைய புதல்வருக்குத் தெரியாமல் மறைந்து கொண்டு. மறை முதியோன்-அந்த முதிய வேதிய னாகிய எச்சதத்தன். சென்றான்.அந்தப் புல்வெளிக்குப் போனான்.

பிறகு வரும் 45-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அவ்வாறு புல்வெளிக்குப் போன வேதியனாகிய அந்த, எச்சதத்தன் தன்னுடைய அழகிய புதல்வராகிய விசார சருமர் சிறப்புற்று விளங்கியவை யும், சேய்ஞலூரில் வேதியர் களினுடைய திருமாளிகைகளில் இருக்கும் பசுமாடுகளினு: டைய வரிசையை அழைத்து க்கொண்டு சென்று நறுமணம் பொருந்தி விளங்கும் முல்லை நிலமாகிய காட்டில் அந்தப் பசுமாடுகளைப் புல்வெளியில் முளைத்திருக்கும் பசும்புற். களை மேயச் செய்பவராகி மண் ணியாற்றின் நடுவில் மணல்கள் பரவியிருக்கும் திட்டில் அன்றைக்கு அந்தப் பசுமாடுகளைக் கூட்டமாகத் தம்மைப் பின்பற்றி வர அழைத் துக் கொண்டு போன அந்தச் செயலைத் தெரிந்து கொண்டு. மறைந்து நின்று கொண்டு அந்தப் பக்கத்தில் வளர்ந்து நின்று இருந்த ஒரு குராமரத்தின் மேல் ஏறி நடப்பதைத் தான் தெரிந்து கொள்ளும் பொருட்டு மறைந்திருந்தான். பாடல் வருமாறு: -

'சென்ற மறையோன் திருமகனார்.

சிறந்த ஊர்ஆன் கிரைகொடுபோய் மன்றல் மருவும் புறவின்கண்

மேய்ப்பார் மண்ணி மணற்குறையில்