பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 525,

அன்று திரளக் கொடுசென்ற

அதனை அறிந்து மறைந்தப்பால் கின்ற குரவின் மிசையேறி

நிகழ்வ தறிய ஒளித்திருந்தான்.'"

சென்ற-அவ்வாறு புல்வெளிக்குப் போன. மறையோன். வேதியனாகிய அந்த எச்சதத்தன். திரு-தன்னுடைய அழகிய. மகனார்-புதல்வராகிய விசார சருமர். சிறந்த-சிறப்புற்று விளங்கியவையும்; வினையாலணையும் பெயர். ஊர்.சேய்ஞ. லூரில் வாழ்ந்து வரும் வேதியர்களினுடைய திருமாளிகை களில் இருக்கும்; இடஆகு பெயர். ஆன்-பசுமாடுகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நிரை-வரிசையை கொடு-தம் மோடு அழைத்துக் கொண்டு. போய்-சென்று. மன்றல்-நறு மணம். மருவும்-கமழ்ந்து விளங்கும். புறவின்கண்-முல்லை நிலமாகிய காட்டில். மேய்ப்பார்-அந்தப் பசுமாடுகளைப் புல்வெளியில் முளைத் திருக்கும் பசும்புற்களை மேயுமாறு புரிபவராகி; முற்றெச்சம். மண்ணி-மண்ணியாற்றின். மணற். குறையில்-நடுவில் மணல்கள் பரவியிருக்கும் திட்டில், மணல்: ஒருமை பன்மை மயக்கம். அன்று-அன்றைத் தினத்தில். திரள பசுமாடுகளைக் கூட்டமாகத் தம்மைப் பின்பற்றி நடந்து வர. க்:சந்தி. கொடு- அழைத்துக் கொண்டு. சென்ற-போன. அதனை-அந்தச் செயலை. அறிந்து-தெரிந்து கொண்டு. மறைந்து-மறைந்து நின்று கொண்டு. அப்பால்-அந்தப் பக்கத் தில், நின்ற-வளர்ந்து நின்றிருந்த குரவின் மிசை-ஒரு குரா மரத்தின் மேல். ஏறி-ஏறி அமர்ந்து கொண்டு. நிகழ்வதுநடப்பதை அறிய-தான் தெரிந்து கொள்ளும் பொருட்டு. ஒளித்திருந்தான்-அந்த எச்சதத்தன் மறைந்திருந்தான்.

பிறகு உள்ள 46-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'பக்தியைக் கொண்டு விளங்கும் பிர்மசாரிகளாகிய அந்த விசார சருமரும் மண்ணியாற்றில் ஒடும் நீரில் முழுகி விட்டு அரனாராகிய தாம் மணல்களைக் குவித்துத் தாபித். திருந்த சிவலிங்கப் பெருமானாருக்கு முன் நாள்களில் தாம்.