பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 - பெரிய புராண விளக்கம்-5

வழங்கிய திருவருள் ஆகும். என்ன-என்று கூறுமாறு. அறிவு அழிந்து-தன்னுடைய அறிவை இழந்து. குரவம்-குராமரத் தின் மேல். மேவும். ஏறி அமர்ந்திருக்கும். முது-முதிய. மறையோன்-வேதியனாகிய எச்சதத்தன். கோபம்-சினம். மேவும்படி-தன்னிடம் மூளுமாறு. கண்டான்-விசாரசருமர் புரியும் பூசையைப் பார்த்தான்.

பிறகு உள்ள 49-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'அவ்வாறு அந்த எச்சதத்தன் தன்னுடைய புதல்வராகிய விசாரசருமர் புரியும் பூசையைப் பார்த்த சமயத்திலேயே வேகமாகத் தான் ஏறி அமர்ந்திருந்த குராமரத்திலிருந்து இறங்கி வந்து வேகமாகப் போய் தன்னுடைய கையில் பிடித் திருந்த தடியை எடுத்துக்கொண்டு தன்னுடைய புதல்வ ராகியவிசாரசருமருடைய அழகிய முதுகில் அடித்து கொடுமை யாக இருக்கும் வார்த்தைகளை அந்த எச்சதத்தன் சொல்ல திருத் தொண்டினைச் செய்தருளும் சிறியவரும் பெருமை. யைப் பெற்றவரும் ஆகிய அந்தப் பிள்ளையாருடைய பெரு மானாகிய சிவலிங்கத்தின் மேல் மிகுதியாக அமைந்திருந்த விருப்பத்தை அந்தச் சிவலிங்கப் பெருமானுக்குத் தாம்புரியும். அருச்சனையில் வைத்தவராகிய அந்த விசார சருமர் வேறு ஒன்றையும் தெரிந்துகொள்ள வில்லை. பாடல் வருமாறு:

கண்ட போதே விரைந்திழிந்து

கடிது சென்று கைத்தண்டு கொண்டு மகனார் திருமுதுகில்

புடைத்துக் கொடிதாம் மொழிகூறத் தொண்டு புரியும் சிறியபெருங்

தோன்ற லார்தம் பெருமான்மேல் மண்டு காதல் அருச்சனையின்

வைத்தார் மற்றொன் றறிந்திலரால்.” கண்ட-அவ்வாறு அந்த எச்சதத்கன் தன்னுடைய புதல்வராகிய விசாரசருமர் தாம் மணல்களைக் குவித்துத் தாபித்திருந்த சிவலிங்கப் பெருமானுக்குப் பூசை புரிவதைப்