பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 53}

பார்த்த. போதே-சமயத்திலேயே. விரைந்து-வேகத்துடன். இழந்து-தான் ஏறி அமர்ந்திருந்த குராமரத்திலிருந்து இறங்கி வந்து. கடிது-வேகத்தோடு. சென்று- ோய், கை-தன்னு: டைய கையில் பிடித்திருந்த த்:சந்தி. தண்டு கொண்டுதடியை எடுத்துக்கொண்டு. மகனார்-தன்னுடைய புதல்வ ராகிய விசாரசருமருடைய. திருமுதுகில்-அழகிய முதுகில். புடைத்து-அடித்துவிட்டு. க்:சந்தி. கொடிது ஆம்.கொடுமை யானவை ஆகும்; ஒருமை பன்மை மயக்கம். மொழி-வார்த் தைகளை, ஒருமை பன்மை மயக்கம். கூற-அந்த எச்சதத்தன் சொல்ல. த்:சந்தி. தொண்டு-திருத்தொண்டினை. புரியும். செய் ருளும். சிறிய-சிறியவரும்; வினையாலனையும் பெயர். பெரும் பெருமையைப் பெற்றவரும் ஆகிய; வினையாலணை யும் பெயர். தோன்றலார் தம்-அந்தப் பிள்ளையாருடைய. தம்: அசை நிலை. பெருமான் மேல்-பெருமையைப் பெற்ற தலைவனாகிய சிவலிங்கப் பெருமான் மேல். மண்டு-மிகுதி யாகத் தம்மிடம் அமைந்திருந்த காதல்-விருப்பத்தை, அருச்சனையின்-அந்தச் சிவலிங்கப் பெருமானுக்குத் தாம் புரியும் அருச்சனையில். வைத்தார்-வைத்திருப்பவராகிய அந்த விசாரசருமர். மற்று-வேறு. ஒன்று-ஒன்றையும். அறிந்:

திலர்-தெரிந்து கொள்ளவில்லை. ஆல்: ஈற்றசை நிலை.

பிறகு வரும் 50-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "யாவரினும் மேம்பட்டவரும், பெருமையைப் பெற்ற வரும் ஆகிய அந்த விசாரசருமர் பல தடவைகளும் சினம் மூண்டவனாகிய எச்சதத்தன் தன்னுடைய கையில் பிடித்துக் கொண்டிருந்த தடியினால் தம்மைப் புடைக்க வேறு எதை யும் தெரிந்து கொள்ளாமல் இருந்த அந்த விசாரசருமர் பசு மாடுகளின் மடிகளில் உள்ள முலைகளிலிருந்து கறந்த பாலால் நிரம்பிய அபிடேகத்தைத் தாம் மணல்களைக் குவித்துத் தாபித்திருந்த சிவலிங்கப் பெருமானுக்குப் புரியும் திருப்பணியில் சிறிதளவும் சலிக்காமல் இருப்பதைப் பார்த்து மயக்கத்தை அடைந்தவனாகும் வேதியனாகிய எச்சதத்தன்