பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 பெரிய புராண விளக்கம்-5

மிகவும் சினம் மூண்டு அந்த விசாரசருமர் வைத்திருந்த அபிடேகத்துக்குரிய இடத்தில் நிரப்பியிருந்த பாலைத் தன்னுடைய காலினால் தள்ளிவிட்டுத் தரையில் சிந்துமாறு: செய்தான், தன்னுடைய கைகளினால் கடமையில் தலை சிறந்து நின்றவனாகிய அந்த எச்சதத்தன். பாடல் வருமாறு:

மேலாம் பெரியோர் பலகாலும்

வெகுண்டோன் அடிக்க வேறுணரார் பாலார் திரு மஞ்சனம்ஆட்டும்

பணியிற் சலியா ததுகண்டு மாலாம் மறையோன் மிகச்செயிர்த்து வைத்த திருமஞ் சனக்குடப்பால் காலால் இடறிச் சிந்தினான்

கையாற் கடமைத் தலைகின்றான்.” மேலாம்-யாவரினும் மேம்பட்டவராகும். பெரியோர். பெருமையைப் பெற்றவராகிய அந்த விசாரசருமர். பல காலும்-பலதடவைகளும். காலும்: ஒருமை பன்மை மயக்கம் . வெகுண்டோன்-கோபம் மூண்டவனாகிய எச்சதத்தன் . அடிக்க-தன்னுடைய கையில் பிடித்துக்கொண்டிருந்த தடியி னால் தம்மைப் புடைக்க. வேறு உணரார்-வேறு எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்த அந்த விசாரசருமர். பால் ஆர்.பசுமாடுகளின் மடிகளில் உள்ள முலைகளிலிருந்து கறந்த பாலால் நிரம்பிய. திருமஞ்சனம்-அபிடேகத்தை. ஆட்டும்தாம் மணல்களைக் குவித்துத் தாபித்திருந்த சிவலிங்கப் பெருமானுக்குப் புரியும். பணியில்-திருப்பணியில். சலி யாதது-சிறிதளவும் சலிக்காமல் இருப்பதை. கண்டு-பார்த்து. மால் ஆம்-மயக்கத்தை அடைந்தவன் ஆகும்; ஆகுபெயர். மறையோன்-வேதியனாகிய எச்சதத்தன். மிக-மிகுதியாக, ச்:சந்தி. செயிர்த்து-சினம் மூண்டு. வைத்த அந்த விசார சருமர் வைத்திருந்த திருமஞ்சன அபிடேகத்துக்கு உரிய. க்:சந்தி. குடப்பால்-குடத்தில் நிரப்பியிருந்த பாலை.