பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 - பெரிய புராண விளக்கம்-5

மூர்த்தியாகிய நடராஜப் பெருமான் தன்னுடைய திருவுள் ளத்தில் விருப்பம் மிகுதியாக உண்டாக வெளிப்படக் காட்சியை வழங்கியருளியவுடன் அந்தப் பெருமானைத் தரிசித்து அவனை வணங்கித் தம்முடைய திருவுள்ளத்தில் உவகையை அடைந்து அந்தப் பெருமானுடைய திருவடிகளா கிய செந்தாமரை மலர்களின் மேல் பக்தி முதிர்ச்சியை அடைந்த சிறுவராகிய அந்த விசார சருமர் விழுந்து வணங்கினார். பாடல் வருமாறு: -

யூத கணங்கள் புடைசூழப்

புராண முனிவர் புத்தேளிர் வேத மொழிகள் எடுத்தேத்த

விமல மூர்த்தி திருவுள்ளம் காதல் கூர வெளிப்படலும்

கண்டு தொழுது மனம்களித்துப் பாத மலர்கள் மேல்விழுந்தார்

பத்தி முதிர்ந்த பாலகனார்.' பூத-பூதங்களினுடைய, ஒருமை ப்ன்மை மயக்கம். கணங்கள்-கூட்டங்கள். புடை-தம்முடைய இரண்டு பக்கங் களிலும்; ஒருமை பன்மை மயக்கம். சூழ-சுற்றி வர. ப்:சந்தி. புராண-பழைய முனிவர்-முனிவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். புத்தேளிர்-தேவர்களும்: ஒருமை பன்மை"மயக்கம். வேத மொழிகள்-வேதத்திலுள்ள மந்திரங்களை. எடுத்து. எடுத்துக் கூறி. ஏத்த-துதிக்க. விமல-ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் அற்ற. மூர்த்தி.மூர்த்தி பாகிய நடராஜப் பெருமான். மூர்த்தி-திருவுருவத்தைப். பெற்றவன். திருவுள்ளம்-தன்னுடைய திருவுள்ளத்தில். காதல்-விருப்பம், வாத்ஸல்யம் எனலும் ஆம். கூர-மிகுதி பாக உண்டாக, வெளிப் படலும்-வெளிப்படுத்த தமமுடைய காட்சியை வழங்கியருளியவுடன். கண்டு-அவனைத் தரிசித்து. தொழுது-அவனை வணங்கி. மனம்-தம்முடைய திருவுள்ளத்