பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 537

தில். களித்து-உவகையை அடைந்து. ப்:சந்தி, பாத-அந்தப் பெருமானுடைய திருவடிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். மலர்கள் மேல்-செந்தாமரை மலர்களின் மேல், பத்தி முதிர்ந்த-பக்தி முதிர்ச்சியை அடைந்த. பாலகனார்-சிறுவரா கிய அந்த விசாரசருமர். விழுந்தார்-விழுந்து வணங்கினார். விமலர்: நின் மலனார் கலிக்கச் சிநெறிக் காரைக் காட்டார்ே.” என்று திருஞான சிம்பந்த மூர்த்தி நாயனாரும், 'நிருத்தனை நிமலன் தன்னை.", 'நெய்யாடி நின்மலனே." என்று திருநாவுக்கரசு நாயனாரும், மெய்யா விமலா போற்றி. , 'நித்தா போற்றி நிமலா போற்றி.', அரி யாய் போற்றி அமலா போற்றி", நின்மலா போற்றி, போற்றி.', 'நீசனேனை ஆண்டு கொண்ட நின்மலா.', 'நண்ணுதற்கரிய விமலனே.", 'குருந்தம் மேவிய சீர் அமலனே.” என்று மாணிக்க வாசகரும், மலக்கலப் பற்றான்.”, “நின்மல மேனி நிமலன்.' என்று திருமூலரும், கீழ்வேளுர் விமலர்.”, நீல விட அரவணிந்த ಥಿLDENT.', "வென்றி வெள்ளே றுயர்த்தருளும் விமலர்." என்று சேக் கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. X

அடுத்து வரும் 54-ஆம் பாடலின் கருத்து வருமாறு: ‘கட்டிய கொன்றை மாலையைச் சுற்றி அணியும் சடா பாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்ற நடராஜப் பெருமானாருடைய இரண்டு திருவடிகளின் நிழலின் கீழ் விழுந்து வணங்கியவராகிய விசார சருமரைத் தரையிலிருந்து எடுத்து அந்தப் பெருமானார் பார்த்தருளி, 'ன்ம்முடைய பொருட்டினால் உன்னைப் பெற்ற தந்தையின் கால்களைத் தரையில் விழுமாறு மழுவால் வெட்டினாய்; அடுத்த படி உள்ள தந்தை இனிமேல் நினக்கு யாமே" எனத் திருவாய், மலர்ந்தருளிச் செய்துவிட்டு அந்த விசார சருமரை அனைத் தருளி பொருந்திய கருணையினால் அவருடைய திருமேனி யைத் தடவிக் கொடுத்து விட்டு அவருடைய உச்சியை