பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 539

வராகிய நடராஜப் பெருமானாருடைய அழகிய செந்தா ഥങ്ങ7 மலர்களைப் போன்ற திருக்கரங்கள் தடவும் பாக்கியத் தைப் பெற்ற சிறுவராகிய அந்த விசாரசருமர் அந்த இடத் தில் மாயையால் உண்டாகிய தம்முடைய திருமேனியோடு ஒர் அளவு இல்லாமல் உயர்ச்சியைப் பெற்ற சிவமயமே யாகி பொங்கிக் கொண்டு எழுந்த அந்த நடராஜப். பெரு மானார் வழங்கிய திருவருளாகிய கடலில் முழுகி தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரம தேவன் முதலாக இருக்கும் பரிசுத்தமாகிய தேவர்கள் தோத்திரம் புரியுமாறு தம்மைச் சுற்றியுள்ள பிரகாசத்தினிடையில் அந்த விசார சருமர் தோற்றத்தை வழங்கினார். பாடல் வருமாறு: செங்கண் விடையார் திரு மலர்க்கை

தீண்டப் பெற்ற சிறுவனார் - அங்கண் மாயை யாக்கையின்மேல்

அளவின் றுயர்ந்த சிவமயமாய்ப் பொங்கி எழுந்த திருவருளில்

மூழ்கிப் பூமேல் அயன்முதலாம் துங்க அமரர் துதிசெய்யச்

சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.” செம்-சிவப்பாக இருக்கும். கண்-கண்களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். விடையார்-இடப வாகனத்தை ஒட்டுபவராகிய நடராஜப் பெருமானாருடைய. திரு-அழகிவ. மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம்.க்:சந்தி.கை-திருக்கரங்கள்:ஒருமை பன்மைமயக்கம். தீண்ட-தடவும் பாக்கியத்தை வினையாலனையும் பெயர். ப்:சந்தி. பெற்ற-அடைந்த சிறுவனார்-சிறுவராகிய அந்த விசார சருமர். அங்கண்-அந்த இடத்தில். மாயை-மாயை யால் உண்டாகிய, பாக்கையின் மேல்-தம்முடைய திருமேனி யோடு; உருபு மயக்கம், அளவு-ஓர் அளவு. இன்று-இல்லால்ை. உயர்ந்த-உயர்ச்சியை அடைந்த. சிவமயமாங்-சிவமயமே