பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் - 54}

சண்டி சனுமாம் பதம் தந்தோம்’

என்றங் கவர்பொற் றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக்கொன்றை

மாலை வாங்கிச் சூட்டினார்.’’

அண்டர்-தேவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். பிரானும்-தலைவனாகிய நடராஜப் பெருமானும், தொண் டர் தமக்கு-அந்த விசார சருமரைத் தன்னுடைய திருத் தொண்டர்களுக்கு. தம்: அசை நிலை, அதிபன்-தலைவனாக. ஆக்கி-செய்தருளி. நாம்-யாம். உண்ட-திருவமுது செய்த். கலமும்-பாத்திரமாகிய பிரம கபாலத்தையும். உடுப்பனவும் -உடுப்பவை ஆகிய புவித் தோலையும் மான் தோலையும். சூடுவனவும்-எம்முடைய தலையில் அணிந்திருப்பவையாகிய பிறைச் சந்திரனையும், கொன்றை மாலையையும், கங்கை ஆற்றையும், பாம்புகள் முதலியவற்றையும். உனக்கு ஆகஉனக்கு உரியவை ஆகுமாறு. அனைத்தும்-மேலே கூறிய எல் லாவற்றையும் வழங்கி, ச்:சந்தி. சண்டிசனும் ஆம்-சண்டீசன் ஆகும். பதம்-பதவியை. தந்தோம்-உனக்கு வழங்கினோம். என்று-என அந்தப் பெருமானார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. அங்கு-அந்த இடத்தில். அவர்-அந்தச் சண்டீ சருடைய, பொன்-பொலிவைப் பெற்ற, தட-விசாலமாகிய, முடிக்கு-தலையில்; உருபு மயக்கம். த்:சந்தி. துண்டதுண் டாக விளங்கும். மதி-பிறைச் சந்திரனையும். சேர்-தம்மு டைய தலையில் சேர்ந்திருக்கும். சடை-சடாபாரத்தில் சூட்டியிருக்கும். க்:சந்தி. கொன்றைமாலை-கொன்றை மலர் மாலையையும். வாங்கி-தம்முடைய தலையிலிருந்து எடுத்து. ச்:சந்தி. சூட்டினார்-அந்தச் சண்டீசுர நாயனாரு டைய தலையில் அணிந்தருளினார்.

பிறகு உள்ள 57-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"எல்லா உலகங்களிலும் வாழ்பவர்கள் ஆரவார ஒலியை எழுப்பவும், எல்லா இடங்களிலும் தேவர்கள் கற்பக மரத்தில்