பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 பெரிய புராண விளக்கம்-5.

ஏந்தியிருந்த அழகைப் பெற்ற மழுவாயுதத்தால் தன்னு: டைய கால்கள் எறிந்து வட்டப் பெற்று இறந்து போய்த் தான் புரிந்த குற்றம் அகன்று தன்னுடைய உறவினர்களோடு எல்லாப் பொருள்களுக்கும் மூலமிம் முதல்வரும் ஆகியகைலாச பதியார் எழுந்தருளியிருக்கும் சிவலோகத்தை அந்த முதிய வேதியனும், விசாரசருமருடைய தந்தையுமாகிய எச்சதத் தன் அடையும் பாக்கியத்தைப் பெற்றான். பாடல் வருமாறு:

ஞாலம் அறியப் பிழைபுரிந்து

நம்பர் அருளால் நான்மறையின் சீலம் திகழும் சேய்ஞலூர்ப்

பிள்ளை யார்தம் திருக்கையில் கோல மழுவால் ஏறுண்டு

குற்றம் நீங்கிச் சுற்றமுடன் மூல முதல்வர் சிவலோகம்

எய்தப் பெற்றான் முது மறையோன். ஞாலம்-இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்க ள்: இஆகு பெயர். அறிய-தெரிந்து கொள்ளுமாறு. ப்:சந்தி. பிழை-தன்னுடைய புதல்வராகிய விசாரசருமர் மணல் களைக் குவித்துத் தாபித்திருந்த சிவலிங்கப் பெருமானைத் தன்னுடைய கால்களால் உதைத்துத் தள்ளிவிட்டதாகிய குற்றத்தை. புரிந்து செய்து நம்பர்-தம்முடைய அடியவர் களுக்கு, இவரை வணங்கினால் நமக்குச் செல்வம் ச்ேரும், நல்ல திருமாளிகை கிடைக்கும், பயிர்கள் வளரும் வயல் களைப் பெறலாம், சமயத்தில் உதவிபுரியும் உறவினர்களைப் பெறலாம், இடித்துக்கூறும் நண்பர்களை அடையலாம், நம் முடைய கன்னிகைக்கு நல்ல கணவனைத் திருமணம் புரிந்து கொள்ளும் நன்மையைப் பெறலாம், நம்முடைய புதல்வர் களுக்கு அழகும், நற்பண்புகளும் பெற்ற கன்னிகைகளைத் திருமணம் புரிவதற்கு அடையலாம் என்பன போன்ற நம்பிக் கைகளை உண்டாக்குபவராகிய நடராஜப் பெருமானார்.