பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் - 545

அருளால்-வழங்கிய திருவருளால். நான்மறையின்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களிலும் கூறப் பெற்ற, சீலம்-நல்ல குணங்களும் நல்ல ஒழுக்கமும்; ஒருமை பன்மை மயக்கம். திகழும்-பெற்று விளங்கும். சேய்ஞலூர்-சேய்ஞலூரில் திருவவதாரம் செய்தருளிய, ப்:சந்தி. பிள்ளையார்.சிறுவ ராகிய விசாரசருமர். தம்-தம்முடைய. திருக்கையில்-அழகிய கையில் ஏந்தியிருந்த கோல-அழகைப் பெற்ற மழுவால்-மழு ஆயுதத்தால். ஏறுண்டு-தன்னுடைய இரண்டு கால்களும் எறிந்துவெட்டப்பெற்று இறந்து போய். குற்றம்-தான்புரிந்த மேற்சொன்ன பிழை. நீங்கி-அகன்று. ச்: சந்தி. சுற்றமுடன்தன்னுடைய உறவினர்களோடு; திணை மயக்கம். மூலஎல்லாப் பொருள்களுக்கும் மூலகாரணரும்; திணை மயக்கம் முதல்வர்-முதல்வரும் ஆகிய கைலாசபதியார். சிவலோகம்எழுந்தருளியிருக்கும் சிவலோகத்தை. முது. அந்த முதிய. மறையோன்-வேதியனும் விசார சருமருடைய தந்தையு மாகிய எச்சதத்தன். எய்த-அடையும். ப்:சந்தி. பெற்றான். பாக்கியத்தைப் பெற்றான்.

பிறகு உள்ள 59-ஆம் கவியின் கருத்து வருமாறு: "விசார சருமர் மணல்களைக் குவித்துத்த தாபித் சிவ லிங்கப் பெருமானுடைய ஆலயத்துக்கு வந்து எச்சதத்தன் தன்னுடைய கால்களினால் அந்தப் பெருமானுடைய திருவுரு வத்தை உதைத்துத் தள்ளி விட்டதாகிய அந்த விசார சருமர் புரிந்தருளிய பூசைக்கு இடையூற்றைப் புரிந்த தம்முடைய தந்தையாகிய எச்சதத்தனுடைய கால்களை ஒரு மழுவாயு . தத்தால் வெட்டியருளிய சிறிய வேதியராகிய அந்த விசார சருமர் அந்தத் திருமேனியோடு அரனாராகிய கைலாச பதி யாருக்குப் புதல்வர் ஆனார்: இந்த அற்புதமாகிய நிலையைத் தெரிந்து கொண்டவர் யார் இருக்கிறார்? சொல்லப் புகுந் தால் முடிவு இல்லாதவராகிய நடராஜப் பெருமானாரிடம் பக்தியைக் கொண்டிருந்த சிவபெருமானுடைய அடியவர்கள்