பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 547

மயக்கம். செய்தனவே-புரிந்த செயல்களே. தவம் ஆம்-தவம் ஆகும். அன்றோ-அல்லவோ? இது வேற்றுப் பொருள் வைப்பணி. - - - - -

- இந்த சண்டேசுர நாயனார் புராணத்தில் உள்ள இறுதிப் பாடலாகிய 60-ஆம் கவி சுந்தர் மூர்த்தி நாயனாருடைய துதியாக இருப்பது. அதன் கருத்து வருமாறு: .

"பக்தி நிரம்பியிருந்த தம்முடைய திருவுள்ளத்தோடு நீல நிறம் நிரம்பி விளங்கும் நீல மணிய்ைப் போன்ற திருக்கழுத்தைப் பெற்ற பரமேசுவரனுடைய அடியார்களு டைய பெருமைகளை எல்லா வகையாகிய உயிர்களும் வணங் குமாறு பாட எடுத்துக் கொண்டு இந்தப் பாரத நாட்டில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் திருத் தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தை முன் ஒரு காலத்தில் பாடியருளிய திருவாளனாகிய சுந்தரமூர்த்தி யினுடைய நறுமணம் கமழும் செந்தாமரை மலர்களைப் போன்ற மென்மையாகிய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடி களைப் பணியும்படி அடியேங்களுக்கு உண்டாகிய இந்த மனிதப் பிறவியைப் பணிவோமாக. பாடல் வருமாறு: - " நேசம் நிறைந்த உள்ளத்தால்

- நீலம் நிறைந்த மணிகண்டத்

தீசன் அடியார் பெருமையினை

எல்லா உயிரும் தொழஎடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத்

தொகைமுன் பணித்த திருவாளன் வாச மலர்மென் கழல்வனங்க - வந்த பிறப்பை வணங்குவாம்.' நேசம்-பக்தி. நிறைந்த-நிரம்பியிருந்த உள்ளத்தால்தம்முடைய திருவுள்ளத்தோடு; உருபு மயக்கம். நீலம்-ஆல கால விடத்தை விழுங்கியமையால் நீல நிறம். நிறைந்தநிரம்பி விளங்கிய. மணி-நீலமணியைப் போன்ற, கண்டத்து. திருக்கழுத்தைப் பெற்ற. ஈசன்-பரமேசுவரனுடைய. அடி