பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாய நாயனார் புராணம் 53

உ டை-உடைய. ஆன்-பசுமாடுகளின் ஒருமை பன்மை மயக்கம், நிரை-வரிசை. சூழ-தம்மைச் சுற்றி வர. ப்: சந்தி. பூ-மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அலர்-மலர்ந்த, தார். மாலையை அணிந்தவரும்; திணை மயக்கம். க்: சந்தி, கோவலனார்-பசுமாடுகளை மேய்ப்பவரும் ஆகிய அந்த நாயனார். நிரை-பசுமாடுகளினுடைய வரிசையை. காக்கபாதுகாக்கும் பொருட்டு. ப்:சந்தி. புறம்-தம்முடைய திரு மாளிகைக்கு வெளியில். போந்தார்.வந்தருளினார்.

பிறகு வரும் 19-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'நீல நிறத்தையும் பெருமையையும் பெற்ற மயில் கூவ வம், வரிசையான கொடிகளில் மொய்க்கும் வண்டுகள் முது லைப் பண்ணினை இசைக்கவும், அழகைப் பெற்ற வெண்மை யான அரும்புகளையும் அழகையும் பெற்ற முல்லைக் கொடி, இந்திர கோபப்பூச்சிகளும் முறையே டற்களையும் வாயில் உள்ள இதழ்களையும் காண்பிக்க, அசையும் மின்னுகின்ற மின்னலைப் போன்ற இடுப்பைச் சுற்றியுள்ள மாலையை அணிந்த கொங்கைகள் அசையுமாறு இந்தப் பூமியாகிய நீளமான நடன சபையில் நடனம் புரியும் பொருட்டு கார் காலம் என்னும் பருவமாகிய நல்ல பெண்மணி வந்தாள்.' பாடல் வருமாறு:

நீலமா மஞ்ஞை ஏங்க கிரைக் கொடிப் புறவம் பாடக் கோலவெண் முகையேர் முல்லை கோபம்வாய் முறுவல்

காட்ட ஆலுமின் இடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலகீ டரங்கில் ஆடக் காரெனும் பருவ கல்லாள்.' நீல-நீல நிறத்தையும். மா-பெருமையையும் பெற்ற. மஞ்ஞை-மயில், ஏங்க-கூவ. நிரை-வரிசையாகப் படர்ந்த, க்:சந்தி. கொடி-பூங்கொடிகளில்; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. புறவம்-மொய்க்கும் வண்டுகள் முல்லைப் பண் ளிைனை. பாட-இசைக்கவும். க்:சந்தி. கோல-அழகைப்

பெ-4