பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 54 பெரிய புராண விளக்கம்-5

பெற்ற வெண்-வெண்மையான முகை-அரும்புகளையும்: ஒருமை பன்மை மயக்கம். ஏர்-அழகையும் பெற்ற.. முல்லை-முல்லைக் கொடியும். கோபம் - இந்திர கோபப் பூச்சிகளும். முறுவல்-பற்களையும்; ஒருமை பன்மை மயக்கம். வாய்-வாயில் உள்ள அதரங்களையும்; ஆகுபெயர்; எதிர் நிரனிறை. காட்ட-காண்பிக்க. ஆலும்-அசையும். மின்மின்னலைப் போன்ற, இடை-இடுப்பை. சூழ்-சுற்றியுள்ள. மாலை-மலர் மாலையை அணிந்த ப்:சந்தி. பயோதரம்-- கொங்கைகள்; ஒருமை பன்மை மயக்கம். அசைய-அசையு மாறு. ஞாலம்-இந்தப் பூமியாகிய, நீடு- நீளமாக உள்ள. ஆடரங்கில்-நடனசபையில். ஆட-நடனம் புரியும் பொருட்டு. க்: சந்தி. கார்-கார் காலம். எனும்-என்னும்; இடைக்குறை. பருவ-பருவமாகிய, நல்லாள் வந்தாள்-நல்ல பெண்மணி வந்து சேர்ந்தாள்.

பிறகு வரும் 20-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

எல்லாப் பக்கங்களிலும் பசுமாடுகளின் வரிசையைப்: பரவி மேயுமாறு செய்வதற்காகத் தம்முடைய திருக்கரத்தில் எடுத்துக் கொண்ட தடியை உடைய இடையராகிய ஆனாய நாயனாருடைய பக்கத்தில் வணங்கி அடையக் குளிர்ச்சியைப் பெற்ற முல்லை நிலத்திற்கு எழுந்தருளும் த ைல வ ரா கி ய அந்த நாயனார் அந்தப் பக்கத்தில் தாழ்வாக உள்ள கிளையில் மலர்ந்த மலர் களின் பக்கத்தை அடைந்து அந்த மலர்களில் இருந்த தேனைக் குடித்து, செம்மையும் அருமையும் குளிர்ச்சியும் உள்ள வண்டுகள் சுழலும் செழுமையைப் பெற்ற ஒரு கொன்றை மரத்தின் பக்கத்தை அந்த நாயனார் அடைந்தார்." பாடல் வருமாறு: -

  • எம்மருங்கும் கிரைபரப்ப எடுத்தகோல் உடைப்பொதுவர்

தம்மருங்கு தொழுதணையத் தண்டிறவில் வருந்தலைவர்.