பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெரிய புராண விளக்கம்-5

நின்று கொண்டு உருக்கத்தை அடைந்து ஒருமைப் பாட்டை அடைந்த தம்முடைய் திருவுள்ளத்தில் உண்டாகிய பக்தி யைத் தம்மை ஆளாக உடையவராகிய அந்த நடராஜப் பெருமானாரிடத்தில் மடையைப் போலப் பக்தியை வெளிப் படுத்திக் கொண்டு விளங்கினார். பாடல் வருமாறு:

சென்றணைந்த ஆனாயர் செய்தவிரைத் தாமமென மன்றல்மலர்த் துணர்துக்கி மருங்குதாழ் சடையார்போல்

கின்றநறும் கொன்றையினை நேர்நோக்கி கின்றுருகி

ஒன்றியசிங் தையில்அன்பை உடையவர்.பால்

மடைதிறந்தார்.” - சென்று-அவ்வாறுபோய். அணைந்த-அடைந்த.ஆனாயர்ஆனாயநாயனார். செய்த-கட்டி அமைத்த விரை-நறுமணம் மழும். த்:சந்தி. தாமம்-மலர் மாலை. என-என்று கூறு மாறு; இடைக்குறை. மன்றல் - நறுமணத்தைப் பெற்ற. மலர்-மலர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. துணர்-கொத்துக்களை ஒருமை பன்மை மயக்கம். துரக்கி. தொங்க விட்டு, மருங்கு - த ம் மு ைட ய தலையில். தாழ்-தாழ்ந்த சடையார் போல்-சடாபாரத்தைக் கொண்ட நடராஜப் பெருமானாரைப் போல. நின்ற-வளர்ந்து நின்ற. தறும்.நல்ல மணத்தைப் பெற்ற மலர்கள் மலர்ந்திருக்கும். கொன்றையினை-ஒரு கொன்றை மரத்தை. நேர்-தமக்கு எதிரில். நோக்கி-பார்த்து. நின்று-நின்று கொண்டு. உருகி

உருக்கத்தை அடைந்து. ஒன்றிய-ஒருமைப் பாட்டை அடைந்த சிந்தையில்-தம்முடைய திருவுள்ளத்தில் உண் டாகிய, அன்பை-பக்தியை. உடையவர் பால்-தம்மை

ஆளாக உடையவராகிய அந்த நடராஜப் பெருமானாரி

டத்தில். மடை-கடல் மடை திறந்தாற் போல். திறந் தார்.பக்தியை வெளிப்படுத்திக் கொண்டு விளங்கினார். "கடல்மடை திறந்தனைய அன்பர் அன்புக் கெளியை' என வருவதைக் காண்க.

அடுத்து உள்ள 22-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: