பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாய நாயனார் புராணம் 5T

பக்தி நீர் ஊற்றைப் போல ஊறி மேலே பொங்கி எழும் அமுதத்தைப் போன்ற இசையை எழுப்பும் புல்லாங்குழலின் இனிய நாதத்தால் வன்மையைப் பெற்ற பூதங்களின் சேனையை ஆளுபவராகிய நடராஜப் பெருமானாருக்குரிய ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ் சாட்சரத்தை உச்சரித்து அந்தப் பெருமானாரைத் துதித்து விட்டுத் தாம் முன் நாட்களில் ஊதி வருகின் ற அளவோடு முறைப்படியே எல்லா உயிர்களும் தங்களுடைய எலும்புகள் தங்களுடைய உடம்புகளினூடு கரைந்து உருகச் செய்யும் இனிய இசையை ஊதும் மூங்கிலாற் செய்யப் பெற்ற இசைக் கருவிகளாகிய புல்லாங்குழல்களில். பாடல் வருமாறு:

அன்பூறி மிசைப்பொங்கும் அமுதஇசைக் குழலொலியால்

வன்பூதப் படையாளி எழுத்தைந்தும் வழுத்தித்தாம்

முன்பூதி வருமளவின் முறைமையே எவ்வுயிரும்

என்பூடு கரைந்துருக்கும் இன்னிசை வேய்ங்

k கருவிகளில்.’’

இந்தப் பாடல் குளகம். அன்பு-பக்தி, ஊறி-நீர் ஊற்றைப் போல ஊறி. மிசை-மேலே. பொங்கும்-பொங்கி எழும். அமுத-அமுதத்தைப் போன்ற. இசை-இசையை எழுப்பும். 'கானா முதம் படைத்த காட்சி மிக விந்தையடா...' என்று பாரதியார் பாடுவதைக் காண்க. க், சந்தி. குழல்-புல்லாங் குழலை ஊதும். ஒலியால்-இனிய நாதத்தால். வன்-வலி மையைப் பெற்ற. பூத-பூதங்களின்; ஒருமை பன்மை மயக்கம் படை-சேனையை. ஆளி-ஆளுபவராகிய நடராஜப் பெருமா மானாருக்கு உரிய சிவபெருமான் பூதங்களோடு இருப்பவர் என்ற கருத்தைப் புலப்படுத்தும் இடங்களை வேறோரிடத் தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. எழுத்து ஐந்தும்ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ் சாட்சரத்தை, எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். வழுத்திஉச்சரித்து அந்தப் பெருமானாரைத் துதித்துவிட்டு, த்: சந்தி தாம் முன்பு-தாம் முன்னை நாட்களில் ஊதி வரும்-புல்லாங்