பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெரிய புராண விளக்கம்-5

குழலை ஊதி வரும். அளவில்-அளவோடு; உருபு மயக்கம் முறைமையே-முறைப்படியே. எவ்வுயிரும் - எல்லா உயிர் களும்; ஒருமை பன்மை மயக்கம். என்பு-எலும்புகள்; ஒருமை பன்மை மயக்கம். ஊடு - தங்களுடைய உடம்புகளினுாடு. கரைந்து உருக்கும்-கரைந்து உருகச் செய்யும். இன்-இனிய. இசை-இசையை ஊதும். வேய்-மூங்கிலாற் செய்யப் பெற்ற. ங்: சந்தி. கருவிகளில்-இசைக் கருவிகளாகிய புல்லாங்குழல் களில்,

பிறகு உள்ள 23-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

ஆனாய நாயனார் புல்லாங்குழலில் உள்ள ஒவ்வொரு துளைக்கு வெளியிலும் ஒவ்வொரு விரல் அளவாக ஏழு விரல் களின் அளவு இடையில் இடம் விடப்பட்டுள்ள முத்திரைத் துளையோடு எட்டுத் துளைகளைப் பெற்ற இனிய இசையை ஊதும் புல்லாங்குழலைத் தம்முடைய திருக்கரத்தில் எடுத் துக் கொண்டு மரத்திலிருந்து தொங்கும் மலர்களில் கோடு களைப் பெற்றவேண்டுகள் மகரந்தப் பொடிகளைப் பற்றிக் கொண்டு உண்பவற்றைப் போலச் சுற்றியுள்ள நான்கு பக்கங் களிலும் ரீங்காரம் செய்து இசை எழுமாறு நின்று கொண்டு. பரிசுத்தமான பெருமையைப் பெற்ற வாய் வைத்து ஊதும் தனியான துளையில் அடியேங்களுடைய தலைவராகிய அந்த நாயனார் தம்முடைய பவளங்களைப் போன்ற உதடுகளை வைத்து அந்தப் புல்லாங்குழலை ஊத. பாடல் வருமாறு:

ஏழுவிரல் இடையிட்ட இன்னிசைவங்கியம்.எடுத்துத் தாழுமலர் வரிவண்டு தாதுபிடிப் பனபோலச் சூழுமுரன் றெழகின்று தூயபெரும் தனித்துளையில் வாழியகம் தோன்றலார் மணி அதரம் வைத்து த.' இந்தப் பாடலும் குளகம். ஏழு விரல்-ஆண்ாய நாயனார் புல்லாங்குழலில் உள்ள ஒவ்வொரு துளைக்கு வெளியிலும் ஒவ்வொரு விரலின் அளவாக ஏழு விரல்களின் அளவு. விரல்: ஒருமை பன்மை மயக்கம். இடையிட்ட-இடையில் இ.ம் விடப்பட்டுள்ள முத்திரைத் துளையோடு எட்டுத்