பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாய நாயனார் புராணம் - 59

து ைள க ைள ப் பெற்ற . இன்-இனிய இசை, இசையை ஊதும். வங்கியம்-புல்லாங்குழலை. வங்கியம்வம்சம்' என்ற வட சொல்லின் திரிபு. வங்கியம்-மூங்கிலால் செய்யப் பெற்ற புல்லாங்குழல்;ஆகு பெயர். வங்கியம்மூங்கில். எடுத்து-தம்முடைய திருக்கரத்தில் எடுத்துக் கொண்டு. த்: சந்தி. தாழும்-மரத்திலிருந்து தொங்கும். மலர்-மலர்களில்; ஒருமை பன்மை மயக்கம். வரி.கோடுகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம், வண்டு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். தாது மகரந்தப் பொடிகளை; ஒருமை பன்மை மயக்கம். பிடிப்பன போல-பற்றிக் கொண்டு உண்ப வற்றைப் போல. ச்: சந்தி. சூழும்-சுற்றியுள்ள நான்கு பக் :பங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். முரன்று-fங்காரம் செய்து. எழ-இசை எழுமாறு. நின்று-நின்று கொண்டு. தூய. பரிசுத்தமான பெரும் பெருமையைப் பெற்றிருக்கும். தனிவாயை வைத்து ஊதும் தனியான, த், சந்தி. துளையில்-புல் லாங்குழலின் ஒரத்தில் உள்ள துளையில். வாழிய:அசை நிலை. நம். அடியேங்களுடைய; என்றது சேக்கிழார் தம்மை யும் பிற தொண்டர்களயுைம் சேர்த்துச் சொன்னது. தோன்றலார்-தலைவராகிய அந்த நாயனார். மணி-பவளங் களைப் போன்ற; ஒருமை பன்மை மயக்கம், அதரம்-உதடு களை; ஒருமை பன்மை மயக்கம். வைத்து ஊத-வைத்து

அந்தப் புல்லாங்குழலை ஊத.

வண்டுகள் தாதை உண்ணுதல்: கொங்குண் வண்டே கரியாக வந்தான்,' என்று திருமங்கையாழ்வாரும், 'செம் பொறிவண்டே...அரும் பூங் கோ ைத ப் பூந்தாதுண்டு.” (பெருங்கதை, 3.1:174-8) என்று கொங்கு வேளிரும், "தாதுரிஞ்சி உண்னும் வண்டினம்.'(சீவக சிந்தாமணி,2305) என்று திருத்தக்கதேவரும், 'கொங்குகவர் நீலச் செங்கட் சேவல். (சிறுபாணாற்றுப்படை,184) என்று நல்லூர் நத்தத்த னாரும், 'தா'துண்தும்பி போது முரன்றாங்கு." (மதுரைக் காஞ்சி, 655) என்று மாங்குடி மருதனாரும், "தாதுண்வண்