பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*68. - பெரிய புராண விளக்கம்-5

'கூத்தாடும் மயில்களினுடைய கூட்டங்களும் ஆனாய iநாயனார் புல்லாங்குழலை ஊதும்இஅந்த இடத்திற்கு வந்து அசைவதையும் மறந்து போய் அவருடைய பக்கத்தை அடை யவும், தங்களுடைய காதுகளினூடு இசை நிரம்பிய உள்ளங்க ளோடு பறவைகளினுடைய கூட்டமும் அவருடைய பக்கத் தில் தரையில் படுத்துக் கொண்டு உணர்ச்சி அகல, அந்தப் பக்கங்களில் தங்களுடைய தொழில்களைச் செய்து கொண்டு இருக்கும் கூட்டமாகக் கூடியுள்ள வலிமையைப் பெற்ற பசு மாடுகளை மேய்க்கும் இடையர்களும் தாங்கள் புரியும் தொழில்களைக் குறையாக விட்டுவிட்டு அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். பாடல் வருமாறு:

" ஆடும்.மயில் இனங்களும்அங் கசைவயர்ந்து மருங்கணுக

ஊடுசெவி இசைநிறைந்த உள்ளமொடு புள்ளினமும் மாடுபடிங் துணர்வொழிய மருங்குதொழில் புரிந்தொழுகும் கூடியவன் கோவலரும் குறைவினையின் துறைகின்றார்." ஆடும்-கூத்தாடும். மயில் மயில்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். இனங்களும்-கூட்டங்களும், அங்கு-ஆனாய நாயனார் புல்லாங்குழலை ஊதும் அந்த இடத்திற்கு வந்து. அசைவு-அசைவதையும். அயர்ந்து-மறந்து போய். மருங்கு. அவருடைய பக்கத்தை. அணுக-அடையவும். ஊடு செவி. தங்களுடைய காதுகளினுாடு. செவி: ஒருமை பன்மை மயக் கம். இசை நிறைந்த-இசை நிரம்பிய. உள்ளமொடு-உள் ளங்களோடு; ஒருமை பன்மை மயக்கம். புள்-பறவைகளி லுடைய, ஒருமை பன்மை மயக்கம். இனமும் கூட்டமும். அவைகளாவன: காகம், கிளி, பருந்து, கழுகு, தூக்கணாங் குருவி. சிட்டுக்குருவி, கொக்கு, நாரை, மைனா முதலியவை. மாடு-அந்த நாயனாருடைய பக்கத்தில், படிந்து-தரையில் படுத்துக் கொண்டு. உணர்வு - உணர்ச்சி ஒழிய - அகல. மருங்கு - அந்தப் பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். தொழில் - தங்களுடைய தொழில்களை; ஒருமை பன்மை மயக்கம். புரிந்து ஒழுகும்-செய்து கொண்டிருக்கும். கூடிய