பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T2 பெரிய புராண விளக்கம்-5

இது ஒன்றனோடு ஒன்று பகையாக உள்ள உயிர்கள் அந்தப் பகைமையை மறந்து ஆனாய நாயனார் ஊதிய புல் லாங்குழலின் கீதநாதத்தில் மயங்கி நிற்பதைக் குறிக்கிறது. நலிவாரும். பிறரைத் துன்புறுத்துபவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். மெலிவாரும். பிறரால் துன்பத்தை அடைந்து மெலிவை அடைபவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். உணர்வு-தங்களுடைய உணர்ச்சி.ஒன்றாய்-ஒன்றாக அமைய. நயத்தலினால்-ஆனாய நாயனார் புல்லாங்குழலில் ஊதும் கீத நாதத்தை விரும்புவதனால். மலி-மிகுதியான, வாய்வாயில், வெண் - வெண்மையான. எயிற்று-பற்களைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். அரவம்-பாம்பு. மயில் மீது-அந்தக் கீத நாதத்தைக் கேட்பதற்காக வந்த மயிலின் மேல். மருண்டு விழும்-மயங்கி விழும். சலியாத-நடுங்காத. நிலை-நிலையைப் பெற்ற, அரியும்-சிங்கமும். தடம்-விசால மான உடம்பை உடைய, கரியும்-அந்தக் கீதநாதத்தைக் கேட்கும் பொருட்டு வந்த யானையும். உடன்சாரும்-சேர்ந்து நிற்கும்.புல்வாய-புற்களைத் தன்னுடைய வாயில் கொண்ட. புல்: ஒருமை பன்மை மயக்கம். புல்வாயும் மானும். அது தன் வாயில் கொண்ட புற்களை மெல்லாமல் நின்று கீத நாதத்தைக் கேட்கும். புலிவாயில்-அந்தக் கீத நாதத் தைக் கேட்க வந்த புலியினுடைய வாய்க்கு உருபு மயக் கம். மருங்கு-பக்கத்தில். அணையும்-வந்து சேரும்.

விலங்குகளும் இசையைக் கேட்டு மயங்கும் என்பதை, 'காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும், பாட்டின் அவையதனைப் பாம்பழியும் என்றுரைப்பார்.’’ என்று பாரதி யார் பாடுவதனாலும் அறியலாம்.

பிறகு வரும் 35-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "ஆனாய நாயனார் புல்லாங்குழலை ஊதும் இடத்தில் வீசிய காற்று வேகத்தைப் பெற்று வீசுவது இல்லாமல் நிற்கும்; அந்த இடத்தில் வளர்ந்து நிற்கும் பல வகை மரங்களில் மலர்கள் மலர்ந்திருக்கும் கிளைகள் அசையா; கருமையான