பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘74 பெரிய புராண விளக்கம்-5

செய்யாமல் இருக்கும். எழு கடலும்-உப்புக் கடல், கருப்பஞ் சாற்றுக் கடல், கள்ளுக் கடல், நெய்க் கடல், தயிர்க் கடல், பாற் கடல், நன்னீர் கடல் என்னும் ஏழு கடல்களும். கடல்: ஒருமை பன்மை மயக்கம். இடை-தங்களிடத்தில். துளும்பா. தளும்பாமல் அமைதியாக இருக்கும்.

பிறகு உள்ள 36-ஆம் பாடலின் கருத்து வருமாறு: வண்டுகள் மொய்க்கும் நறுமணத்தை மிகுதியாக வீசும் 'கொன்றை மலர் மாலையை அணிந்த தலையில் சடாபாரத் தைப் பெற்றவராகிய நடராஜப் பெருமானாருடைய திரு 'வடிகளை வணங்கும் திருத்தொண்டராகிய ஆனாய நாயனார் தம்முடைய சிவந்த அதரங்களைக் கொண்ட திரு வாயின்ம்ேல் வைத்த அழகிய புல்லாங்குழலை ஊதுவதால் உண்டான கீத நாதம் தங்களை உருகுமாறு செய்ய, இவ்வண் ணம் நிற்பவையாகிய அசரங்களும், நடப்பனவாகிய சரங் களும் அந்த நாயனார் ஊதிய சங்கீதத்தின்மயமாகித் தங் களுடைய உடம்புகளில் தங்கியிருக்கும் கண்கள், காதுகள் : தோல், மூக்கு, நாக்கு என்னும் ஐந்து இந்திரியங்களும் , மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு அந்தக் கரணங்களும் அமைந்த ஒன்றாக ஆகிவிட்டன. பாடல் வருமாறு:

இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசைமயமாய்

மெய்வாழும் புலன்கரணம் மேவியஒன் றாயினவால், மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையார் - அடித்தொண்டர் செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல்வா சனைஉருக்க.’’ இதில் உள்ள பின் இரண்டு அடிகளின் பொருளை முதலில் கொள்ள வேண்டும். மொய்-வண்டுகள் மொய்க் கும். வாச நறும்-நறுமணத்தை மிகுதியாக வீசும். கொன்றைகொன்றை மலர் மாலையை அணிந்த முடி-தலையில், சி: சந்தி, சடையார்-சடாபாரத்தைப் பெற்றவராகிய நட ராஜப் பெருமானாருடைய. அடி-திருவடிகளை வணங்கும்