பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாய நாயனார் புராணம் 81.

ஆனாய நாயனார். பெருமையைப் பெற்றவர்’ எனலும் ஆம் குழல்-புல்லாங்குழலாகிய கருவி-இசைக் கருவியை. அருகும் பக்கத்தில். இசைத்து-ஊடு இசையை வாசித்து. அங்கு. அந்த இடத்தில். உடன் - நடராஜப் பெருமானாரோடு. செல்ல-எழுந்தருள, ப், சந்தி. புண்ணியனார் - புண்ணிய னார் ஆகிய அந்தப் பெருமானார். சிவபெருமானைப் புண்ணி யர் என்று குறிக்கும் இடங்களை முன்பே ஒரிடத்தில் கூறி னோம்; ஆண்டுக் கண்டுணர்க. எழுந்தருளி - எழுந்தருளிச் சென்று. ப்: சந்தி. பொற்பொதுவினி ைட - சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் பொன்னம்பலத் திற்குள். ப்:சந்தி. புக்கார்-நுழைந்தார்.

இந்தப் புராணத்தின் இறுதியில் உள்ள 42-ஆம் பாடல் அந்தர மூர்த்தி நாயனார் துதியாக விளங்குகிறது. சேக்கிழார் ஒவ்வொரு சருக்ககத்தின் இறுதியிலும் சுந்தரமூர்த்தி நாயனாருடைய துதியைப் பாடியருளுவது வழக்கம், இந்தப் பாடலின் கருத்து வருமாறு:

திய செயல்களைக் கொண்ட தீவினைகளாகிய பாவங் களைச் செய்யும் நிலைக்கு நாம் வரமாட்டோம்; சிவந்த சடா பாரத்தைத் தம்முடைய தலையின்மேற் கொண்ட நடராஜப் பெருமானாரை அவருடைய திருச்செவிகளில் அணிந்து கொண்டசங்கக் குழைகள் வீசும் ஒளியையுடைய நிலா இருட்டை அடியோடு போக்கப் பரவை நாச்சியார் கொண்ட ஊடலைப் போக்கும் பொருட்டு அவருடைய திருமாளிகைக்கு இரண்டு தடவைகள் எழுந்தருளுமாறு அவரைத் தூதராக ஏவிக் கொள்பவராகும் சுந்தர மூர்த்தி நாயனார் அடியேங் களைத் தம்முடைய தொண்டர்களாக ஏற்றுக் கொண்டு அவ் வாறு ஏற்றுக் கொள்ளும் உரிமையைப் பெறுவார். பாடல்

வருமாறு:

தீதுகொள் வினைக்கு வாரோம்: செஞ்சடைக் கூத்தர்

தம்மைக் காதுகொள் குழைகள் வீசும் கதிர்கில விருள்கால் சீக்க