பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பெரிய புராண விளக்கம்-5

மாதுகொள் புலவி நீக்க மனையிடை இருகால் செல்லத் தூதுகொள் பவராம் நம்மைத் தொழும்புகொண் டுரிமை

கொள்வார்.'" தீது-தீய செயல்களை; ஒருமை பன்மை மயக்கம். கொள்-கொண்ட வினைக்கு-தீவினைகளாகிய பாவங்.

களைச் செய்யும் நிலைக்கு, ஒருமை பன்மை மயக்கம். வாரோம்-நாம் வரமாட்டோம்; இது சேக்கிழார் கூறியது. செம்-சிவந்த சடை-சடாபாரத்தைத் தம்முடைய தலையின்

மேற் கொண்ட, க்:சந்தி. கூத்தர் தம்மை-நடராஜப் பெரு மானாரை. தம்: அசைநிலை. க்:சந்தி. காது-தம்முடைய திருச்செவிகளில்; ஒருமை பன்மை மயக்கம். கொள்-அணிந்து கொண்ட குழைகள்-சங்கக் குழைகள். வீசும் கதிர்-வீசும் ஒளியாகிய, நிலவு-நிலா. இருள்-இருட்டை. கால்சீக்கஅடியோடு போக்க, மாது-விருப்பம் மருவியவராகிய பரவை நாச்சியார். கொள்-மேற்கொண்ட, புலவி-ஊடலை.. நீக்க-போக்கும் பொருட்டு. மனையிடை-அவருடைய திரு. மாளிகைக்கு; உருபு மயக்கம். இரு-இரண்டு. கால்-தடவை கள்; ஒருமை பன்மை மயக்கம். செல்ல எழுந்தருளுமாறு. த்:சந்தி, தூது-அவரைத் தூதராக; திணை மயக்கம். கொள்பவராம்-து தராக ஏவிக் கொள்பவராகும் சுந்தர மூர்த்தி நாயனார். நம்மை-அடியேங்களை. இது சேக் கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துச் சொன்னது. த் சந்தி. தொழும்பு. தெr எண்டர் ளாக திணை மயக்கம். கொண்டு-ஏற்றுக் கொண்டு. உரிமை-அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் உரிமையை கொள்வார்-பெறுவார்.