பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் 3-ஆவதாக விளங்கும் இலைமலிந்த சருக்கத்தில் ஆறாவதாக அமைந்திருப்பது அரிவாட்டாய நாயனார் புராணம். அதில் வரும் முதற் பாடலின் கருத்து விருமாறு: - * . -

ஒடி வரும் நீர் நிறைந்து பொன்னைக் கொழிக்கும் காவிரியாறு பாயும் சோழ நாட்டில் விளங்கும் மக்கள் இனிது வாழும் ஒர் ஊர், அரும்புகள் வண்டுகளோடு சுற்றி ரீங்காரம் செய்யது வரும் விருப்பத்தை அடையும் மெல்லிய கணுக் களை உடையவ்ையாகி இவைகளை விட்டு உயரமாக வளரும் கரும்புச் செடிகள் தேனைச் சொரியும் கணமங்கலம் என்பது." பாடல் வருமாறு: - - -

' வரும்பு னற்பொன்னி நாட்டொரு வாழ்பதி சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட விரும்பு மென்கண் உடையவாய் விட்டுநீள் கரும்பு தேன்சொரி யும்கண மங்கலம்.'

வரும்-ஒடி வரும். புனல்-நீர் நிறைந்து. பொன்னிபொன்னைக் கொழிக்கும் காவிரியாறு பாயும்; பொன்னி பொன் கொழிக்கும்.’’ என வருவதைக் காண்க. நாட்டுசோழ நாட்டில் விளங்கும். ஒரு வாழ்பதி-மக்கள் இனிது வாழும் ஒர் ஊர். க்ரும்பு-சுரும்பு என்னும் வண்டுகள், !