பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 91.

சூழும் இதழ்ப்பங்கய மாகஅத் தோட்டின் மேலாள் தாழ்வின்றி என்றும் தனிவாழ்வதத் தையல் ஒப்பார் யாழின் மொழியிற் குழலின் னிசை யும்சுரும்பும் வாழும் நகரம் மதுராபுரி என்பதாகும்.’’ சூழும்-சுற்றியிருக்கும். இதழ்-இதழ்களைப் பெற்ற. ப்:சந்தி. பங்கயமாக-தாமரை மலராகவும். அத்தோட்டின்அந்த இதழ்களின் ஒருமை பன்மை மயக்கம். மேலாள்மேல் எழுந்தருளியிருக்கும் திருமகள். தாழ்வு இன்றி-தாழ்வு இல்லாமல். என்றும்-என்றைக்கும். தனி-ஒப்பற்ற நிலையில், வாழ்வது-வாழும் இடமாகவும். அத்தையல்-அந்த இளம் பெண்ணாகிய திருமகளை. ஒப்பார்-போன்ற பெண்மணிகள். யாழின்-யாழை மீட்டினாற் போல. மொழியில்-பேசும் வார்த்தைகளில், ஒருமை பன்மை மயக்கம். குழல்-புல்லாங் குழலின். இன் இசையும்-இனிய கானமும், சுரும்பும்- அவர் களுடைய கூந்தல்களில் வண்டுகளும்; ஒருமை பன்மை மயக்கம். வாழும் வாழ்வதாகவும் விளங்கும். நகரம்-பெரிய

சிவத் தலம். மதுராபுரி-மதுரை மாநகரம், என்பது ஆகும். -என்று சொல்லப் பெற்ற ஊர் ஆகும்.

மதுராபுரி தாமரை மலராகவும், என்றும் திருமகன் :வாழும் இடமாகவும், இனிய வார்த்தைகளைப் பேசும் பெண்மணிகள் வாழு ம் இ ட மா கவு ம். விளங்கும் என்றபடி, நகரத்திற்குத் தாமரை மலரை உவமானமாகக் கூறுவதை, மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீருர் பூவின் இதழகத் தனைய தெருவம் இதழகத், தரும் பொகுட்டனைத்தே அண்ணல் கோயில்." (பரிபாடல் திரட்டு, 7:1-4), நீன்ற உருவின் நெடியோன் கொப்பூழ், நான்முக ஒருவற் பயந்த பல்விதழ்த், தாமரைப் பொருட்டிற் காண்வரத் தோன்றிச், சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின். (பெரும்பாணாற்றுப்படை, 402-6), கோயில் கொட்டையாகத் தாமரைப், பூவொடு பொலியும் பொலிவுற்றாகி. (பெருங்கதை, 3,3:108-9), பொய்கை