பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெரிய புராண விளக்கம்- 8

போர்க் களம் புறவிதழ் புலவு பாட்டடை புல்லிதழ், ஐய சொல்களி றசவிதழ் அரசர் அல்லிதன் மக்களா, மையில் கொட்டை அம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையாற். பைய உண்டபின் கொட்டை மேற் பவித்திரத் தும்பி பறந் ததே.' (சீவக சிந்தாமணி, 2311) என்பவற்றால் அறியலாம்.

பிறகு வரும் 5-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

"தகுதி வாய்ந்த இயல் இசை நாடகம் என்னும் மூன்று தமிழ்கள் நிலை பெற்றுத் தங்கிய அழகிய இடங்களைப் பெற்ற பழைய நகரமாகிய அந்த மதுராபுரியில் நூல்களைக் கற்கும் இடத்திலும் செய்யுட்கள் மிகுதியாக அரங்கேறும் கல்விச் சங்கங்கள் இருக்கின்றன; வலிமையைப் பெற்ற தலைகளை உடைய எருமை மாடுகள் பாயுமாறு தடாகங். களிலும் நீர் நிரம்பியிருக்கிறது; அந்த எருமை மாடுகளின் பால் பரவிய முலைகள் படியும் காட்சிகள் தடாகங்களிலும் இருக்கின்றன; தேன் நிரம்பிய தாமரை மலர்கள் பரவிய, எந்த இடத்திலும், சேல் மீன்கள் துள்ளிப் பாயும் தடாகங். களிலும் வயல்களிலும் சங்குப் பூச்சிகள் இருக்கின்றன." பாடல் வருமாறு:

சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய அங்கண் மூதூர் நூல்பாய் இடத்தும் உள; நோன்றலை மேதி பாயப் பால்பாய் முலைதோய மதுப்பங்கயம் பாய எங்கும் சேல்பாய் தடத்தும் உள, செய்யுள்மிக் கேறுசங்கம்.' சால்பாய-தகுதி வாய்ந்த, மும்மைத் தமிழ்-இயல் இசை நாடகம் என்னும் மூன்று தமிழ்கள்; தமிழ்: ஒருமை பன்மை மயக்கம். தங்கிய-நிலை பெற்றுத் தங்கிய. அம்-அழகிய. கண் - இடங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மூதூர்-பழைய நகரமாகிய அந்த மதுராபுரியில். நூல்-நூல் களை ஒருமை பன்மை மயக்கம். பாய்-கற்கும். இடத்து ம்இடத்திலும், செய்யுள்-செய்யுட்கள்; ஒருமை பன்மை மயக்கம். மிக்கு-மிகுதியாக. ஏறு-அரங்கேறும். சங்கம்-கல்விச் சங்கங்கள்; ஒருமை பன்மை மயக்கம். உள-இருக்கின்றன