பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பெரிய புராண விளக்கம்-இ

போகுமாறு செம்மையான சைவ சமய வழியைச் சேர்ந்திருக் கும் அடியேனுடைய தமக்கையாராகிய திலகவதியாருடைய திருவடிகளைச் சென்று அடியேன் அடைவேன்' என்று." பாடல் வருமாறு: . அவ்வார்த்தை கேட்டலுமே

அயர்வெய்தி. இதற்கினியான் எவ்வாறு செய்வன்?’ என ஈசர்அருள் கூடுதலால் "ஒவ்வாஇப் புன்சமயத்

தொழியாஇத் துயரொழியச் செவ்வாறு சேர்திலக -

வதியார்தாள் சேர்வன். என: இந்தப் பாடல் குளகம். அவ்வார்த்தை-அந்தச் சமையற். காரன் கூறிய அந்த வார்த்தைகளை ஒருமை. பன்மை மயக்கம். கேட்டலும்-மருணிக்கியார் கேட்டவுடன். ஏ: அசைநிலை. அயர்வு-அவர் சோர்வை. எய்தி-அடைந்து. - இதற்கு-இந்தத் துன்பத்தைப் போக்குவதற்கு, துன்பம் என்றது. சூலைநோயை. இனி-இனிமேல். யான்-அடியேன். எவ்வாறு-எந்த வண்ணம். செய்வன்-புரிவேன். என-என்று எண்ணி; இடைக்குறை. ஈசர்-பரமேசுவரராகிய திருவ திகை வீரட்டானேசுவரர். அருள்-வழங்கிய திருவருள். கூடுத லால்-சேர்வதால். ஒவ்வா-அடியேனுக்குப் பொ. ரு த் த ம் இல்லாத. இப்புன்-இந்தப் பொலிவற்ற, சமயத்து-சமண சமயத்திலிருந்து. ஒழியா-விட்டுவிட்டு நீங்காத. இத்துயர்இந்தத் துயரம். ஒழிய-போகுமாறு. ச்சந்தி, செவ்வாறு செம்மையாகிய சைவ சமய வழியை. சேர்-சேர்ந்திருக்கும். . திலகவதியார்-அடியேனுடைய தமக்கையாராகிய திலகவதி யாருடைய. தாள்-திருவடிகள்ை: ஒருமை பன்மை மயக்கம். சேர்வன்-திருவதிகை வீரட்டானத்தைப் போய் அடைவேன்.

என-என்று; இடைக்குறை. '... . . . . . .

பிறகு வரும் ஆேம் பாடலின் கருத்து வருமாறு: