பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பெரிய புராண விளக்கம்- 6

யார் தம்மையும் தம்முடைய சாதியினரையும் சேர்த்துக் கூறியது. குலம்-சாதியில் வி செய்த-முற்பிறப்பில் புரிந்த,

றந்தவர்கள் திணை மயக்கம். நல்-நல்ல. த. வத்தின் தவத் தி னுடைய, பயன்-பிரயோசனத்தை. அைை பீர்-போல விளங்கு பவரே. இந்த-அடியேனுடைய இந்த உடல்-உடம்பில் உள்ளவயிற்றில் உண்டாகியிருக்கும் இடஆகுடேயர். கோடும் கொடுமையாக இருக்கும். சூலைக்கு-சூலை நோயினால்: உருபு மயக்கம். இடைந்து-வருத்தத்தை அடைந்து. அடைந் தேன்-தங்களிடம் வந்து சேர்ந்தேன். இனி-இனிமேல். மயங் காது-சமண சமயத்தைச் சேர்ந்து மயக்கத்தை அடையாதி வண்ணம். உய்ந்து-உஜ்ஜீவனத்தை அடைந்து; என்றது சைவ சமயத்தைச் சார்வதை. கரை-சமண சமயமாகிய படு குழியிலிருந்து சுனையின் மேல். ஏறும்-ஏறுவதற்கு உரியதாக இருக்கும். நெறி-வழியை. உரைத்தருளும்-தாங்கள் திருவாய் மலர்ந்தருளிச் செய்வீராக. என-என்று; இடைக்குறை. உரைத்து-அந்த மருணிக்கியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. -

பிறகு வரும் 64-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அவ்வாறு தம்முடைய இரண்டு திருவடிகளின்மேல் விழுந்து வணங்கிச் சோர்வை அடையும் தம்முடைய தம்பியா ராகிய மருணிக்கியாரை அந்தத் திலகவதியார் பார்த்து தம்மை ஆளாக உடைய தம்முடைய தலைவனாகிய வீரட் டானேசுவரன் வழங்கும் திருவருளை எண்ணித் தம்முடைய கரங்களைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கும்பிட்டு பிறகு தரையின்மேல் விழுந்து அந்த ஈசுவரனை வணங்கி விட்டு, "சான்றோர்கள் ஏற்றுக் கொள்ளுதல் இல்லாத வேறு சமயமாகிய சமண சமய வழியாகிய படுகுழியில் விழுந்து அறியாமல் மூண்டிருக்கும் சகிப்பதற்கு அருமையாக இருக்கும் துயரத்தினால் வருத்தத்தை நீர் அடைந்திர்; தரையிலிருந்து எழுந்திருப்பீராக’ என்று அந்தத் திலகவதி யார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல்.வகுமாறு: