பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திருநாவுக்கரசு நாயனார் புராணம் 123

மயிர்க் கூச்சுக்கள். முகிழ்த்து-அரும்பி, அலரமலர. ப்:சந்தி, பொங்கும்-பொங்கி எழும். புனல்-நீரை. கண்கள்-தம்மு டைய விழிகள். பொழிந்து-சொரிந்து. இழிய-தரையில் இறங்கி ஒட, ப்:சந்தி. புவி மீது - த ை யி ன் மே ல் விழுந்து-விழுந்தும். புரண்டு.புரண்டு கொண் டு ம் . அயர் வார்-சோர்வை அடைபவராகி; முற்றெச்சம். இங்குஇந்தத் திருவதிகை விரட்டானத்தில். என்-அடியேனுடைய. செயல் உற்ற செய்யப் புகுந் தி. பிழைப்பதனால்-தவறாகிய அதனால், என்றது. சமண சமயத்தைச் சார்ந்திருந்ததை' ஏறாத-ஏற முடியாத பெரும்-பெரியதாக இருக்கும். திடர்மேட்டினமேல் ஏறிட-ஏறும் வண்ணம், நின்-தேவரீருடைய

தங்கும்-என்றும் தங்கி விளங்கும். கருணை-கருணையாகிய ப்:சந்தி. பெரு-பெரிய வெள்ளம். வெள்ளம்-ஆற்றின் வெள் எத்தில்.இட-அடியேனை ஆழ்த்துவதற்கு. த்:சந்தி.தகுமோ அடியேன் தகுதியை உடையவனோ; திணை மயக்கம். எனஎன்று இடைக்குறை. இன்னன-இந்த விதமான வார்த்தை -களை, தாம் என்றது மருணிக்கியாரை. மொழிவார்.அந்த மருணிக்கியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார்.

'ஏறாத பெருந்திடர்” என்றது விலக முடியாமல் தம்மை அகப்படுத்திய சமண சமயத்தை. ஏறிட' என்றது அந்தச் சமண சமயமென்னும் படுகுழியிலிருந்து கரையேறச் செய்ததை. 3 *

பிறகு வரும் 73-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்த மருணிக்கியார், பொய்களைக் கூறுவதையே தங்களுடைய வாய்மொழிகளாக அமைந்த பான்மையைப் பெருகச் செய்த பொலிவற்ற சமண சமயமாகிய அறிவு இல்லாத சமயத்தைச் சார்ந்தவர்களாகிய இழிந்தவர்களு டைய சைவ சமயம் அல்லாத வேறு சமயத் துறையாகும் அந்த ஆழமாகிய படுகுழியில் விழுந்து அதிலிருந்து எழுந்து கரையேறி வரும் வழியைத் தெரிந்து கொள்ளாமல் மயக் கத்தை அடைந்து வீணாகிய செயல்களைச் செய்பவனாகிய