பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாவுக்கரசு நாயனார் புராணம் 139.

யாகிய வார்த்தைகளைப் பேசும் தன்மையையும். இலம்:யாம் பெற்றிலோம். என்று-எனக் கூறிக்கொண்டு. கொடு மையே-கொடுமையாகிய செயல்களையே: ஒருமை பன்மை மயக்கம். புரிவோர்-செய்து வருபவர்களாகிய சமணர்கள்: ஒருமை பன்மை மயக்கம். தலையும்-தங்களுடைய தலை களும் ஒருமை பன்மை மயக்கம். பீலியும்-தாங்கள் தங்க ளுடைய கைகளில் தாங்கள் செல்லும் வழியைப் பெருக்கு வதற்காக வைத்திருந்த மயிற் பீவிகளும்; ஒருமை பன்மை மயக்கம். தாழ-குணியவும்; தாழ்வை அடையவும். தலைகள் குணியவும் மயிற் பீலிகள் தாழ்வை அடையவும் என்றபடி. வந்து-அந்தச் சமணர்கள் வந்து. ஒரு சிறை-ஒரு பக்கத்தை. சார்ந்தார்-அடைந்தா ர்கள்; ஒருமை பன்மை மயக்கம். -

பிறகு வரும் 82-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: - - 'இவ்வாறு பல சமணர்களும் துயரத்தோடு கூடிக் கொண்டு. உண்மையாகிய விதத்தின் வகையைத் தெரிந்து கொண்டானானால் நம்முடைய அரசனும் கோபம்மூண்டு சைவசமயத்தைச் சார்ந்தவனாக மாறி நம்முடைய இறையிலி நிலங்களையும் நாம் கைவிடுமாறு செய்து எடுத்துக் கொள்ளு வான்; இனிமேல் யாம் என்ன செய்வது?' என்று கூறிவிட்டு வஞ்சகமாகிய செயல்களை ஆராய்ந்து கற்பிப்பவர் க்ள் ஆனார்கள். பாடல் வருமாறு: х

' இவ்வகைப்பல அமணர்கள்

துயருடன் ஈண்டி "மெய்வ கைத்திறம் அறிந்திடில்

வேந்தனும் வெகுண்டு சைவ னாகிகம் விருத்தியும் தவிர்க்கும்மற் ប្រាំលៃfឲញ្ចប់ செய்வதென்?"என வஞ்சனை . . தெரிந்துசித் திரிப்பார்.

இவ்வகை-இந்த விதத்தில். ப்:சந்தி. பல அமணர்கள்பல சமணர்களும். துயருடன் துயரத்தோடு. ஈண்டி-கூடிக்