பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பேரிய புராண விளக்கம்-இ

முன்னால் உள்ள வாசலை. காவல். காவல் காத்தலாகிய, பணியை உடையார்கள்-உடைய வாயில் காவலர்கள்,புகுதஅந்தச் சமண சமயத் துறவிகளை உள்ளே நுழையுமாறு. விட-அனுப்ப. க்:சந்தி, காவலன்பால்-அந்தப் பல்லவ மன்ன னிடத்தில், நடையாடும் நடக்கும் தொழில் ஒன்றையே. புரியும். தொழில்-வினையாக உடையார்-உடைய அந்தச் ச்மண சமயத்தைச் சார்ந்த துறவிகள் ஒருமை பன்மை மயக்கம். நண்ணி-அரண்மனைக்குள் சென்று. த்:சந்தி. தாம்-தாங்கள். எண்ணியவாறு-நினைத்தபடி யே, உடை. யார் ஆகிய-நம்முடைய தலைவராக விளங்கிய தருமசேனர் பிணி-தருமசேனர் சூலை என்ற நோயை. உற்றாராய்அடைந்தவராகி. ச்:சந்தி. சடையானுக்கு-தன்னுடைய தலையின் மேல் சடாபாரத்தைப் பெற்றவனாகிய வீரட்டா, னேசுவரனுக்கு. ஆளாய் அடிமையாகி. நின்-உன்னுடைய. சமயம்-சமயமாகிய சமண சமயத்தை. ஒழித்தார்-அழித்து, விட்டார். என்றார்- என்று அந்தச் சமணத் துறவிகள் அந்தப் பல்லவ மன்னனிடம் முறையிட்டுக் கொண்டார்கள்: ஒருமை. பன்மை மயக்கம். . . .

பிறகு உள்ள 83-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "நறுமணம் கமழும் மலர் மாலையை அணிந்து கொண்டி . ருக்கும் அந்தப் பல்லவ மன்னனும் அந்தச் சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் கூறியதைக் கேட்டுச் சின்ம் மூண்டு தன்னு. டைய சிங்காதனத்திலிருந்து எழுந்து வந்து, 'குற்றத்தைப் பெற்ற உள்ள்த்தை உடையவராகிச் சமண சமயத்தை விடடுப் போவதற்காகப் பொய்யாகிய சூலை நோயை தம் மேற்கொண்டு புகழால் சிறப்பை அடைந்த சமண சமயத்தை, அந்தத் தருமசேனர் அழித்துவிட்டுப் போகுமாறு விடுவதா? வரமபு இல்லாத தவத்தைப் புரிந்த சமண சமயத் துறவி களே, இந்தச் செயலுக்கு என்ன, பரிகாரத்தைப் புரிவது?" என்று கேட்டுவிட்டு அந்தப் பல்லவ மன்னன் தீயைப்போலச் சினத்தைக் கொண்டான். பாடல் வருமாறு: