பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பெரிய புராண விளக்கம்-6

  • அந்தத் தருமசேனன் தலைமை வழியாகிய நம்முடைய சமண சமயத்தை அழித்துவிட்டு நின்னுடைய நிலையாக நின்று கொண்டிருந்த பழைய வரம்பை உடைய சமண சமய வழியை அழித்துவிட்ட அறிவில்லாதவனாகிய அந்தத் தரும சேனனைத் தண்டனைக்கு உட்படுத்துவாயாக’ என்றுஅந்தப் பல்லவ மன்னனை அந்தச் சமண சமயத்தைச் சார்ந்த துறவி கள் புகழ்ந்துவிட்டுத் தங்களுடைய வாய்களால் சிறிதேனும் பயத்தை அடையாமல், கொல்லுதலைச்செய்யாத நிலையை மேற்கொண்டு பொய்யாக ஒழுகி வரும் சமணர்களாகிய இழிந்தவர்கள் கூறினார்கள்." பாடல் வருமாறு: -

தலைநெறியா கியசமயக்

தன்னைஅழித் துன்னுடைய நிலைகின்ற தொல்வரம்பின்

நெறியழித்த பொறியிலியை அலைபுரிவாய்' எனப்பரவி

வாயால்அஞ் சாதுரைத்தார் கொலைபுரியா நிலைகொண்டு.

பொய்யொழுகும் அமண்குண்டர்.” தலை-அந்தத் தருமசேனன் தலைமை. நெறியாகியவழியாகிய, சமயத்தன்னை-நம்முடைய சமண சமயத்தை. தன்:அசைநிலை. அழித்து-அழித்துவிட்டு. உன்னுடைய நின்னுடைய நிலை-நிலையாக. நின்ற-நின்று கொண்டி குந்த தொல்-பழைய. வரம்பின்-எல்லைய்ை உடைய. நெறி-சமண சமய வழியை அழித்த_அழித்துவிட்ட பொறுஅறிவு. இலியை-இல்லாதவனாகிய அந்தத் தருமசேனனை: இடைக்குறை. அலைபுரிவாய்-தக்க தண்டனைக்கு உட் படுத்துவாயாக. என-என்று: இடைக்குறை. ப்:சந்தி. பரவி-அந்தப் பல்லவ மன்னனை இந்தச் சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் புகழ்ந்துவிட்டு. வாயால்-தங்களுடைய வாய்களால், ஒருமை பன்மை மயக்கம். அஞ்சாது-சிறி - தேனும்பயத்தை அடையாமல். கோலை கொல்லுதலை