பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பெரிய புராண விளக்கம்- 6

யான சாறு. சாறு-ரஸம். இடை-அந்தக் கரும்புச் செடிகளி னுடைய நடுப்பக்கங்களில் ஒருமை பன்மை மயக்கம். தொடுத்த-வண்டுகள் கட்டிய தேன்-தேன் கூடுகளிலிருந்து: ஆகுபெயர். கிழிய-கிழிவதனால். இழிந்து-இறங்கி. ஒழுகுவழியும். நீத்தமுடன்-தேன் நிறைந்த வெள்ளத்தோடு. புடை-பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். பரந்துபரவி ஓடி . Dமிறு-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். ஒலிப்ப-மொய்த்துக்கொண்டு ரீங்காரம் புரிய, ப்:சந்தி. புது-புதியதாக ஆற்றில் வந்து. ப்:சந்தி. புனல்போல்-நீரைப் போல ஒடிச் சென்று. மடை-வயல்களில் உள்ள மடைகளை; ஒருமை பன்மை மயக்கம். மடை-வயலுக்கு நீர்பாயும் சிறிய கால்வாய். உடைப்ப-உடைக்க, உடை-அவ்வாறு உடைந்தமடை-மடைகளை ஒருமை பன்மை மயக்கம். அக்கரும்புஅந்தக் கரும்புகளை ஆலையில் பிழிந்துவரும் சாற்றைக் கொப்பரையில் இட்டு. அடு-காய்ச்சி எடுத்த. கட்டியின்வெல்லக் கட்டிகளால்; ஒருமை பன்மை மயக்கம். ஊர்கள் தொறும்.ஊர் ஒவ்வொன்றிலும், அடைப்ப-உழவர்கள் அடைப்பார்கள். -

இந்தப் பாடலில் உள்ள வருணனை திருநாவுக்கரசு நாயனாருடைய வரலாற்றைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. வயல்களில் வெட்டிய கரும்புகளைப் பிழிந்தசாறு:மடைகளை உடைத்துச் சென்றது என்பது திருநாவுக்கரசு நாயனார் சைவ சமயத்தை விட்டுவிட்டுச் சமண சமயத்தைச் சார்ந்த தைக் குறிப்பாகப் புலப்படுத்தும். அவ்வாறு மடையை உடைத்த கருப்பஞ்சாற்றை அந்தக்கருப்பஞ்சாற்றைக்காய்ச்சி எடுத்த வெல்லக்கட்டிகளைக் கொண்டு உழவர்கள் அடைப் பார்கள் என்பது அவ்வாறு புறச்சமயமான சமண சமயத்தைச் சேர்ந்து வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரை அதே ஊரில் அவரோடு பிறந்த தமக்கையாராகிய திலகவதியார் அந்த நாயனாரை மீட்டும் சைவ சமயத்திற்கு வரும்படி தடுத்து ஆட்கொண்ட இசயலைக் குறிப்பாகப் புலப்படுத்தும்.