பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 58 பெரிய புராண விளக்கம்-6

கின்ற பெரிய நெருப்பினுடைய வெப்பம் நிரம்பியுள்ள சுண் ணாம்புக் காளவாய்க்கு உள்ளே அமரச் செய்து திருகும் கரிய, தான பூட்டைப் பூட்டி அவர் வெளியில் வராதவாறு பாது காப்புக்களை அவர்கள் செய்து அமைத்தார்கள்.” பாடல்

வகுமாறு: -

' அருகணைந்தார் தமைநோக்கி

அவ்வண்ணம் செய்க எனப் பெருகுசினக் கொடுங்கோலான்

மொழிந்திடலும் பெருந்தகையை உருகுபெருந் தழல்வெம்மை

கீற்றறையின் உள்ளிருத்தித் திருகுகரும் தாட்கொளுவிச்

சேமங்கள் செய்தமைத்தார்.' அருகு-தன்னுடைய பக்கத்தில். அணைந்தார் தம்ை. வந்து சேர்ந்த சமணர்களை. தமை:இடைக்குறை. தம்: அசைநிலை. நோக்கி-பார்த்து. அவ்வண்ணம்-அவ்வாறே. செய்க-அந்தத் தருமசேனனைச் சுண்ணாம்புக் காளவாயில் இடுவீர்களாக. என-என்று; இடைக்குறை. ப்:சந்தி. பெருகுபெருகி மூண்டிருந்த, சின-கோபத்தைக் கொண் ட. க்:சந்தி. கொடுங்கோலான்-கொடுங்கோலன் ஆகிய அந்தப் பல்லவ மன்னன். மொழிந்திடலும்-கூறியவுடன். பெரும்-பெருமை யையும். தகையை தகுதியையும் பெற்றவராகிய திருநாவுக் கரசு நாயனாரை. உருகு-உருகும். பெரும்-பெரியதாக இருக்கும். தழல்-நெருப்பினுடைய. வெம்மை-வெப்பத் தைக் கோண்ட நீற்றறையின்-சுண்ணாம்புக் காளவாயி ஆணுடைய. உள்-உள்ளே. இருத்தி-அமரச் செய்து. த்:சந்தி. - திருகு-திருகிய. கரும்-கருமையான இரும்பால் ஆகிய. தாள்-பூட்டை. கொளுவி-பூட்டிவிட்டு. க்:சந்தி. சேமங்கள்அந்த நாயனார் வெளியில் வராதவாறு தக்க பாதுகாப்புக் களை, செய்து-புரிந்து அமைத்தார்-அமைத்தார்கள் ஒருமை பன்மை மயக்கம்.