பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 165

ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே." என்று சேந்த னாரும், "புவன நாயகனே அசுவுயிர்க் கமுதே.', 'கன்ன லும் பாலும் தேனும் ஆரமுதம் கனியுமாய் இனிமை ஆரி ளையே.", "பாலுமாம் அமுதாம். பன்னகாபரணன்.", கன்னலே தேனே அமுதமே.”, “முக்கட் பகவனாம் அக அவிர்க்கமுதாம்', "முழு மணித் திரளமுதாங்கே தாய் தலைப்பட்டு.”, 'அன்பரானவர்கள் பருகும் ஆரமுதே.”. என்று கருவூர்த் தேவரும், என்னாரமுதை எங்கள் கோவை.", "அடியார்க்கருளும் தெளிவார் அமுதே." என்று கண்டராதித்தரும், "அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்." - "பாலினை இன்னமுதை." என்று திருவாவியமுதனாரும்,

" அப்பனை நந்தியை ஆரா அமுதினை.', 'அமுதமதாக அழகிய மேணி.கேடிலி தானே..' என்று திருமூலரும், *உய்யக் கொண்ட கோதிலா அமுதே.'. 'அடியவர் தம்

கண்ணா ரமுதை.', 'கோதிலா ஆரமுதைக் கோமளக் கொம்புடன் கும்பிட்டு.’’ என்று சேக்கிழாரும் பாடியருளிய வற்றைக் காண்க. . அடுத்து வரும் 100-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "ஓர் ஏழு தினங்கள் போனதற்குப் பிறகு அறிவு இல்லாத சமணர்களை அழைத்து, 'இப்போது அந்தச் சுண்ணாம்புக் காளவாயைத் திறந்து பார்ப்பீர்களாக." என்று அந்தப் வல்லவ மன்னனும் கூறினான்: கருமையாக இருட்டிய இருட் டினுடைய கூட்டத்தைப் போல இருக்கும் உடம்புகளைப் பெற்ற கரிய நிறத்தைக் கொண்ட அந்தச் சமணர்கள் ஆராய்ந்து பார்க்கும் நிலைமை இல்லாதவர்கள் அந்தச் சுண் -ணாம்புக் காளவாயைத் திறந்து பார்த்தார்கள்." பாடல் வருமாறு: r

. ஓரெழுகான் கழிந்ததற்பின்

உணர்வில்அமணரைஅழைத்துப். பாரும்இனி கீற்றறையை

ன் உரைத்தான்.பல்லவனும்