பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 - பெரிய புராண விளக்கம்-இ

இருநாவுக்கரசு நாயனார். தீ-கொடிய நெருப்பைப் போல. வெப்பமாக இருக்கும்’ எனலும் ஆம். விடத்தால்-பாம்பின் சஞ்சினால், வெம்-கொடியவர்களாக இருக்கும்; திணை மயக்கம், சமணர்-அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். இடுவித்த-படைக்கச் செய்த பாலடிசில்-பர்ற். சோற்றை; பாம்பின் விடத்தைக் கலந்த பாற்சோற்றை. மிசைந்து-அமுது செய்து விட்டு. இருந்தார்-ஒரு துன்பத். தையும் அடையாமல் அமர்ந்திருந்தார். -

அடுத்து வரும் 105-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: விபூதியைப் பூசிக் கொள்ளும் திருமேனியைப் பெற்ற வரிசுத்தராகிய வீரட்டானேசுவரருக்கு எல்லா உலகங்க்ளில் வாழும் உயிர்களை இறந்து போகும்படி செய்யும் துயரம் போகும் பொருட்டு முன்பு திருமால் பள்ளி கொண்டருளிய: வாற்கடலில் எழுந்த ஆலகால நஞ்சு அமுதத்தைப் போல ஆகிவிடுமானால், தம்முடைய திருவுருவம் யாருக்கும் தெரிந்து கொள்வதற்கு அருமையாகிய பசுக்களாகிய உயிர் களுக்குப் பதியாராகிய வீரட்டானே சுவரருடைய அடியவர் களுக்குப் பாம்பின் விடம் அமுதத்தைப் போல ஆவது ஒரு வியப்பாகுமோ?’ பாடல் வருமாறு: . -

பொடியார்க்கும் திருமேனிப்

புனிதர்க்குப் புவனங்கள் முடிவாக்கும் துயர்நீங்க

முன்னைவிடம் அழுதானால் படியார்க்கும் அறிவதுே

பசுபதியார் தம்முடைய அடியார்க்கு நஞ்சமுதம் . . . ... " ஆவதுதான் அற்புதமோ?" இந்தப் பாடலில் வேற்றுப் பொருள் வைப்பணி வந்தது. போடி-விபூதியை ஆர்க்கும்-முழுவதும் பூசிக் கொள்ளும். திருமேனி-திருமேனியைப் பெற்ற, ப்:சந்தி. புனிதர்க்குபகிசுத்தராகிய வீரட்டானேசுவரருக்கு. ப்:சந்தி. புவனங்