பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பெரிய புராண விளக்கம்-5

வெவ்விட்மும் அமுதாயிற்

றெனஅமணர் வெருக்கொண்டே இவ்விடத்தில் இவன்பிழைக்கில் எமக்கெல்லாம் இறுதி'எனத் தெவ்விடத்துச் செயல்புரியும்

காவலற்குச் செப்டிவார்.' -- அவ்விடத்தை-அந்தச் சமணர்கள் தமக்கு அளித்த அந்தப் பாம்பின் நஞ்சை, ஆண்ட-வீரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட அரசு-திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம். அமுதுசெய்து-திருவமுது செய்தருளிவிட்டு. முன்-தங்களுக்கு முன்னால். இருப்ப-அமர்ந்து கொண்டிருக்க. வெவ்-நாம் இவனுக்கு அளித்த கொடிய. விடமும்பாம்பின் நஞ்சும். அமுதுஆயிற்று-அமுதத்தைப்போல ஆகிவிட்டது. என-என்று எண்ணி; இடைக்குறை. அமணர் - அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வெருக்கொண்டு-அச் சத்தை மேற்கொண்டு. ஏஅசைநிலை. இவ்விடத்தில்-இந் தத் திருவதிகை விரட்டானத்தில். இவன்-இந்தத் தரும சேனன். பிழைக்கில்-தன்னுடைய உயிர்போகாமல் பிழைத் 'திருப்பவனானால்: திணை மயக்கம். எமக்கு-சமணர்களாகிய நமக்கு, எல்லாம் இறுதி.எல்லாம் முடிவு வந்து விட்டது.எனஎன்று இடைக்குறை. த்:சந்தி, தெவ்விடத்து-பகைவர்கள் போர் புரியும் போர்க்களத்தில். தெவ்:ஒருமை பன்மை மயக் கம். ச்சந்தி. செயல்-போராகிய செய்கையை. புரியும்செய்யும், காவலற்கு-தங்களுடைய மன்னனாகிய அந்தப் பல்லவனுக்கு. ச்சந்தி. செப்புவார்.அவனுடைய அரண் மனைக்குச் சென்று பின் வருமாறு கூறுபவர்கள் ஆனார்கள்: ஒருமை பன்மை மயக்கம். .." . . . .” - - - -

பிற்கு வரும் 107-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

நாங்கள் அந்தத் தருமசேனனுக்குப் பாப்பின் விடத்

தைக் கலந்து பாற்சோற்றை. உண்ணும்ாறு செய்தவுடன்

நம்முடைய சமண சமயத்தில் பாம்பின் நஞ்சைப் போக்கும்