பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பெரிய புராண விளக்கம்-இ.

வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி: வீரட்டம் காதல் விமலா போற்றி.” பிறகு வரும் 118-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு வீரட்டானேசுவரர் தடுத்து ஆளாகக் கொண்ட திருநாவுக்கரசு நாயனாரைப் பணிந்து அச்சத்தை அடைந்து அந்தச் சமணர்கள் அவரைக் கொல்லும் பொருட்டு அனுப்பிய ஆண் யானை அந்த இடத்தைவிட்டு விட்டு ஒட அந்த யானையை ஒட்டியவராகிய அதன் மேல் ஏறியிருந்த வலிமையைப் பெற்ற யானைப் பாகர் அந்த ஆண் யானையைக் கட்டிவிட்டுஅதை அடித்துத் திரியச் செய்து மறு படியும் அந்த ஆண் யானையை அந்தத் திருநாவுக்கரசரின் மேல் வருத்தத்தை அளித்துக் காட்டத் தன்னுடைய துதிக் கையினால் வீசி எறிந்து விட்டுத் தன்னைப் பார்த்தவர் களையே கொன்றுவிட்டு சமணர்களின் மேல் அவர்களை எதிரிட்டு ஓடியது. பாடல் வருமாறு: x. ' ஆண்ட அரசை வணங்கி

அஞ்சி அவ்வேழம் பெயரத் தூண்டிய மேல்மறப் பாகர்

தொடக்கி அடர்த்துத் திரித்து மீண்டும் அதனை அவர்மேல் மிறைசெய்து காட்டிட விசி கண்டவர் தங்களை யேகொன்

றமணர்மேல் ஓடிற் றெதிர்ந்தே.” ஆண்ட-அவ்வாறு வீரட்டானேசுவரர் தடுத்து ஆளாகக் கொண்ட அரசை-திருநாவுக்கரசு நாயனாரை திணை மயக்கம். வணங்கி-பணிந்துவிட்டு. அஞ்சி - அச்சத்தை. அடைந்து. அவ்வேழம்-சமணர்கள் அந்த நாயனாரைக் கொல்லும் பொருட்டு அனுப்பிய அந்த ஆண்யானை. பெயர-அந்த இடத்தை விட்டு ஓடிப்போக. த்:சந்தி. தாண்டிய மேல்-அதன் மேல் வீற்றிருந்து அதை ஒட்டிய. மற-வலிமையைப் பெற்ற, ப்:சந்தி. பாகர்-யானைப்பாகர்.