பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பெரிய புராண விளக்கம்-5

யாகிய ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்களும் அடங்கிய பஞ்சாட்சரம் திருநாவுக்கரசு நாயனாரை இந்தச் சமுத்திரம் ஒரு கருங்கல்வின் மேல் ஏறுமாறு புரிதலைச் சொல்லவும் வேண்டுமோ?’ பாடல் வருமாறு:

இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில்வீழ் மாக்கள் ஏறிட அருளும்மெய் அஞ்செழுத் தரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ?’’ இருவினை. புண்ணியம் பாவம் என்னும் இரண்டு வினை களாகிய, ஒருமை பன்மை மயக்கம், ப்:சந்தி. பாசமும்பாச பந்தமும். மல-ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கல்-கருங்கல். ஆர்த்தலின்-கட்டுவதனால். வ ரு- இ ந் த உலகத்திற்கு வரும். பவ-பிறவியாகிய . க்:சந்தி. கடலில்சமுத்திரத்தில். வீழ்-விழுந்து தடுமாறும். மாக்கள்-அறிவு இல்லாத மக்கள். ஏறிட-கரையேற. அருளும்-திருவருளை வழங்கும். மெய்-உண்மையாகிய, அஞ்சு எழுத்து-ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்களும் அடங்கிய பஞ்சாட் சரம். எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். அரசை-திருநாவுக் கரசு நாயனாரை; திணை மயக்கம். இக்கடல்-இந்தச் சமுத் திரம். ஒரு கல்மேல்-ஒரு சுருங்கல்லின் மேல். ஏற்றிடல்ஏறுமாறு புரிதலை. உரைக்க-சொல்லவும். வேண்டுமோவேண்டியிருக்குமோ.

பவக்கடல்: பெரும்பிறவிப் பெளவத் தெப்பத் தடந் திரையால் எற்றுண்டு.” என்று மாணிக்கவாசகரும், 'இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்.’’ என்று கருவூர்த் தேவரும், இல்லை பிறவிக் கடல் ஏறல்.’’ என்று கபிலதேவ நாயனாரும், தம்மைப் பிறவிக் கடல் கடப்பிப் பவர். என்று பட்டினத்துப் பிள்ளையாரும், பிறவி யெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவி எனும் தோல் தோணி." என்று நம்பியாண்டார் நம்பியும், 'ஏழு