பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 223.

களாவன: உச்சிப்பூ, அராக்கொடி, மாட்டல், ஜிமிக் கிகள், வங்கி, தோள் வளைகள், காசுமாலை, முத்து மாலை, நவரத்தின மாலை, சங்கிவி, கைக்காப்புக்கள், கங்கணங்கள், மேகலை, !ட்டியாணம், கால்காப்புக்கள், கைமோதி ரங்கள், மெட்டிகள், பாதசரம், சிலம்புகள் முதலி யவை. இன்னிய-இனியதாகக் கேட்கும்; விரித்தல் விகாரம். நாதமும்-கானமும். ஏழ்இசை- یr, fi, 5 , حلم , Lوقت , ر f F என்னும் ஏழு சுவரங்களைக் கொண்ட இசைப் பாடல்கள் லுடைய இசை:ஒருமை பன்மை மயக்கம். ஒசையும்-இனிய கானமும். எங்கும்-எல்லா இடங்களிலும், ஒருமை பன்"ை மயக்கம். விம்ம. எழுந்து மிகுதியாக ஒலிக்க. ப்:சந்தி. பொன்-தங்கத்தால். இயல் மகளிர் உரலில் இட்டுக் குத்தியசுண்ணமும்-பொற்சுண்ணத்தையும்; மகளிர் பொற்சுண் ணத்தை இடிப்பதைக் கூறும் இடங்களை முன்பே ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. பூவும்-மலர்களையும்: ஒருமை பன்மை மயக்கம். பொரிகளும் - நெற்பொரி களையும். எங்கும்-எல்லா இடங்களிலும், ஒருமை பன்மை மயக்கம். தூவி.வ - ரி இறைத்து. தொல்-பழமையான நகரின்புறம்-பெரிய சிவத்தலமாகிய திருவதிகை விரட்டா னத்தின் வெளியிடத்திற்கு. சூழ்ந்து-யாவரும் சுற்றி வந்து, தொண்டரை-அந்தத் திருத்தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனாரை. எதிர்கொண்டனர்.அவருக்கு எதிரில் சென்று: வரவேற்றார்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஏ.ஈற்றசை நிலை.

பிறகு வரும் 140-ஆம் கவியின் கருத்து வருமாறு: . பரிசுத்தமாகிய வெண்மையாகிய விபூதியை முழுவதும் பூசிக்கொண்ட தங்கத்தைப் போலச் சிவந்த திருமேனி யையும், தம்முடைய திருமார்பில் தொங்கும் உத்திராக்க மாலையையும், தம்முடைய தலைவனாகிய விரட்டாணேசு வரனுடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் திருவடிகளைத் தழுவி எண்ணும் திருவுள்ளத்