பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 237.

கோவலூர் முதலாக மருவு-உள்ள. திருப்பதி-அழகிய சிவத் தலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பிறவும்-பிற வற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி. வணங்கி-அந்தத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். சிவபெருமான்களைப் பணிந்து விட்டு, வள-சொற்சுவை, பொருட்சுவை என்னும் சுவைகளாகிய வளப்பத்தைப் பெற்ற த்:சந்தி. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த i_jøð திருப்பதிகங்களை: ஆகு பெயர். பாடி-அந்த நாய னார் பாடியருளி. ப்:சந்தி. பெருகு-தம்முடைய திரு வுள்ளத்தில் பெருகி எழுந்த விருப்புடன்-விருப்பத்தோடு. விடையார்-இடபவாகனத்தை ஒட்டுபவராகிய சிவக்கொழுந் தீசர். மகிழ்-மகிழ்ச்சியைப் பெற்று எழுந்தருளி யிருக்கும். மகிழ்: முதல்நிலைத் தொழிற் பெயர். பெண்ணாகடம்திருப்பெண்ணாகடத்திற்கு. அணைந்தார் - எழுந்தருளி அடைந்தார். -

திருவதிகை வீரட்டானம்: இது நடுநாட்டில் கெடில நதிக்கரையில் விளங்கும் சிவத்தலம். இங்கே கோயில் கொண் டிருப்பவர் வீரட்டேசுவரர். அம்பிகை திரிபுரசுந்தரி. இது பண்ணுருட்டிக்குத் தென்கிழக்குத் திசையில் ஒரு மைல் தூரத் தில் கெடில நதியின் உட்கரையில் உள்ளது. வீசும் கெடில வடகரைத்தே எந்தை விரட்டமே என்று தேவாரத். தில் வருவதைக் காண்க. இது அட்ட விரட்டங்களில் ஒன்று: திரிபுரதகனம் புரிந்தருளியதைப் புலப்படுத்தும் தலம் இது. திருநாவுக்கரசு நாயனாருடைய தமக்கையாராகிய திலக. வதியார் வீரட்டானேசுவரரை வழிபட்ட தலம் இது. அந்த நாயனார் சமண சமயத்தைவிட்டு விட்டுச் சைவசமயத்தைச் சேர்ந்த பிறகு, "கூற்றாயினவாறு விலக்க கிலிர்' என்று தொடங்கும் பாசுரத்தைப் பெற்ற ஒரு திருப்பதிகத்தைப் பாடி யருளித் தமக்கு வயிற்றில் உண்டாகியிருந்த குலை. தோயைப் போக்கிக் கொண்ட தலம் இது. பல்லவன் என்னும், சமன. மன்னன் சைவ சமயமே உண்மையானது என்று.