பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.238 - பெரிய புராண விளக்கம்-சி

தெளிவை அடைந்த பிறகு திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமணர்களினுடைய பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து விட்டு அவற்றில் இருந்த கற்களைக்கொண்டு, குணபர சச்சரம்' என்னும் திருக்கோயிலைக் கட்டுவித்தான். அந்த ஆலயமும் இந்தத் தலத்தில் உள்ளது. இதைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு:

" முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்

செற்றார் வாழும் திரிபுரம் தீயெழ

விற்றான் கொண்டெயில் எய்தவர் வீரட்டம்

கற்றால் அல்லதென், கண்துயில் கொள்ளுமே.”

திருவெண்ணெய் நல்லூர்: இது நடுநாட்டில் பெண்ணை

யாற்றங் கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திரு நாமங்கள் தடுத்தாட்கொண்ட ஈசுவரர், கிருபாபுரீசர் என்பவை. அம்பிகையின் திரு நாமங்கள் வேற்கண்ணியம்மை, மங்களாம்பிகை என்பவை. இது பண்ணுருட்டியிலிருந்து 15 மைல் துாரத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் விளங்கும் திருக்கோயிலுக்கு, திருவருட் டுறை என்று பெயர். இந்த ஆலயத்தில் எழுந்தருளி யிருக்கும் கிருபாபுரீசர் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்து ஆண்டுகொண்டருளினார். வெண்ணைய் நல்லூரில் அற்புதப்பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆளது. கொண்ட நற்பதத்தை' என்று தேவாரத்தில் அவர் பாடி ங்குளியதைக் காண்க. மெய்கண்ட தேவர் என்னும் காரணத் திருநாமத்தைப் பெற்றவராகிய சுவேதவனப் பெருமாள் என்னும் சந்தானாசாரியர் வாழ்ந்திருந்த தலம் இது. இந்தத் தலத்திற்கு அருகில் உள்ள புத்தூரில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் திருமணமாகும் சமயத்தில் கிருபாபுரீசர் ஒரு முதிய அந்தணராக வேடங் கொண்டு வந்து அந்தத் திரு. மணத்தைத் தடுக்க, அந்தத் திருமணம் தவிர்ந்தமையால், 'மணம் தவிர்ந்த புத்தார் என்று அந்த ஊர் இக்காலத்தில்