பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் .257

பறந்து தேடிப் பார்த்தும் அவற்றைக் காண முடியாத வராகிய நடராஜப் பெருமானார். நடம்-திருநடனம். ஆடிய - புரிந்தருளிய. திரு-அழகிய, எல்லைப்பால்சிதம்பரத்தினுடைய எல்லையிடத்தில். மேவி-அந்த நாய னார் எழுந்தருளி. த்:சந்தி, தலம் உற-தரையிற் படியு மாறு. மெய்யில்-தம்முடைய திருமேனியினால், உருபு மயக்கம். தொழுதபின்-விழுந்து அந்த நடராஜப் பெருமா னாரை வணங்கிய பிறகு. மேன்மேல்-மேலும் மேலும். எழுதரும்-எழுந்து தோன்றும்.விரைவோடும்-வேகத்தோடும். காவில்-பூம்பொழிலில். களி. மகிழ்ச்சியைப் பெற்ற, மயில். மயில்கள்; ஒருமை பன்மை மயக்கம், மகிழ்வுற்று. ஆனந்தத்தை அடைந்து. எதிர் எதிர்-ஒன்றுக்கு ஒன்று எதிரில் எதிரில். ஆட-நடனமாட க்சந்தி. கடி-நறுமணம். கமழ்-கமழும். கமலம் - செந்தாமரை மலர்களும், வெண்டா மரை ம ல ர் க ளு ம்; ஒருமை பன்மை மயக்கம். சூழ்-சுற்றி மலர்ந்திருக்கும். வாவி-வாவி களும்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி, தடம். தடாகங்களும்; ஒருமை பன்மை மயக்கம். மலர்-மலருகின்ற. 'வதனம்-திருமுகம். பொலிவுறு-விளக்கத்தை அடைந்த மருத-மருத நிலத்தில் உள்ள, த்:சந்தி. தண்-குளிர்ச்சியைப் பெற்ற. பணை-வயல்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். வழி-வழியாகவே. வந்தார்-அந்த நாயனார் நடந்து எழுந் தருளினார். --

அடுத்து வரும் 158-ஆம் கவியின் கருத்து வருமாறு:

நறுமணத்தோடு நெருங்கிய இதழ்கள் விரிந்திருக்கும் செந்தாமரை மலர்களும், வெண்டாமரை மலர்களும் மலர்த் திருக்கும் தடாகங்களில் இறங்கி வந்து முதிய எருமைகள் புதியனவாக மலர்ந்த செந்தாமரை மலர்களையும், வெண் டாமரை மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும், நீலோற்பல மலர்களையும், குமுத, மலர்களையும், வேறு மலர்களையும் மேய்த்து இன்னும் வந்தத் தடாகங்